மும்பை: இந்தியாவில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளன. இந்த இரண்டு வாரத்தில் பெரும்பாலும் ஐபிஓக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த வாரம் சுமார் 9 ஐபிஓக்கள் வர இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மூலதனத்தை திரட்டுவதற்காகவும் வணிக விரிவாக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகவும் பங்குச்சந்தையில் தங்களது நிறுவனங்களை பட்டியலிடுவதற்காகவும் ஐ பி ஓ எனப்படும் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்கை வெளியிடுகின்றன. அதாவது நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டு அதன் மூலம் நிதியை திரட்டுவது. அந்த வகையில் நடப்பு வாரம் வெளியாக இருக்கும் ஐபிஓக்கள்:

DEE Piping Systems: இந்நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 19 முதல் தொடங்கி ஜூன் 21 அன்று முடிவடைகிறது. புதிதாக 1.6 கோடி பங்குகளும் , ஆஃபர் ஃபார் சேல் முறையில் 0.46 கோடி பங்குகளும் இதன் மூலம் விற்பனைக்கு வருகின்றன. ஒரு பங்கின் விலை 193 முதல் 203 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 73 பங்குகள் இடம்பெற்றுள்ளன.
Aasaan Loans: இந்நிறுவனத்தின் ஐபிஓ ஜூன் 19இல் தொடங்கி 21இல் முடிவடைகிறது. புதிதாக 1.1 கோடி பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் 132 கோடி ரூபாயை திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலை 114 முதல் 120 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Stanley Lifestyles: இந்த ஐபிஓ-விற்கு ஜூன் 21 முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இதில் புதிதாக 0.54 கோடி பங்குகளும் ஆஃபர் ஃபார் சேல் முறையில் 0.54 கோடி பங்குகளும் வெளியிடப்படுகின்றன. 337.02 கோடி ரூபாயை திரட்ட இந்த ஐபிஓ வெளியிடப்படுகிறது. ஒரு பங்கின் விலை 351 முதல் 369 ரூபாய் வரை கிடைக்கிறது.
GEM Enviro : இந்நிறுவனத்தின் ஐபிஓ ஜூன் 19இல் தொடங்கி 21இல் முடிவடைகிறது. புதிதாக 14.98 லட்சம் பங்குகளும் , ஆஃபர் ஃபார் சேல் முறையில் 44.93 லட்சம் பங்குகளும் விற்பனைக்கு வருகின்றன. ஒரு பங்கின் விலை 71 முதல் 75 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Durlax Top Surface: இந்நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 19 முதல் தொடங்கி ஜூன் 21 அன்று முடிவடைகிறது. இதில் ஒரு பங்கின் விலை 65 முதல் 68 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Falcon Technoprojects India: ஜூன் 19ஆம் தேதி முதல் இந்த ஐபிஓவிற்கு விண்ணப்பம் செய்யலாம். ஜூன் 21ஆம் தேதி கடைசி நாளாகும். இதில் 14.88 லட்சம் பங்குகள் புதிதாக வெளியிடப்படுகின்றன. ஒரு பங்கின் விலை 92 ரூபாய் ஆகும்.
EnNutrica: இந்நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பம் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூன்24ஆம் தேதி முடிகிறது. புதிதாக 64.5 லட்சம் பங்குகள் இதில் வெளியிடப்பட உள்ளன. ஒரு பங்கின் விலை 51 ரூபாய் முதல் 54 வரை விண்ணப்பிக்கலாம்.
Winny Immigration: இந்த ஐபிஓ விண்ணப்பம் ஜூன் 20இல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைகிறது. இதில் ஒரு பங்கின் விலை 140 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Medicamen Organics: ஜூன் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இந்த ஐபிஓவிற்கு விண்ணப்பம் செய்யலாம். புதிதாக 31 லட்சம் பங்குகளை நிறுவனம் வெளியிடுகிறது. ஒரு பங்கின் விலை 32 ரூபாய் முதல் 34 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications