இந்திய பங்கு சந்தையானது கடந்த சில வாரங்களாகவே பெரும் ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது. டாப் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு பெரும் இழப்பினை கண்டுள்ளது.
இது அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவினைக் கண்டு வருகின்ற நிலையில், இதுவும் இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில் டாப் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 1,87,808.26 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி டாப் லூசர்
இந்த சரிவின் மத்தியில் ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளன.
குறிப்பாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது, 37,848.16 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 8,86,070.99 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ரிலையன்ஸ் & டிசிஎஸ்
இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 36,567.46 கோடி ரூபாய் குறைந்து, 16,14,109.66 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 36,444.15 கோடி ரூபாய் குறைந்து, 12,44,095.76 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி & ஐசிஐசிஐ வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி- யின் சந்தை மதிப்பானது 20,871.15 கோடி ரூபாய் குறைந்து, 4,71,365.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 15,765.56 கோடி ரூபாய் குறைந்து, 5,86,154.58 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எஸ்பிஐ & இன்போசிஸ்
இதே எஸ்பிஐயின் சந்தை மதிப்பானது 8,879.98 கோடி ரூபாய் குறைந்து, 4,64,927.66 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 13,465.86 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 6,52,862.70 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஏர்டெல் & ஹெச்யுஎல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 10,729.2 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 4,22,034.05 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7236.74 கோடி ரூபாய் குறைந்து, 5,83,697.21 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஐடிசி-ன் மதிப்பு அதிகரிப்பு
கடந்த வாரத்தில் ஐடிசி நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் கடந்த வாரத்தில் ஏற்றம் கண்ட பங்குகளில் ஒன்று. இந்த பங்கின் மதிப்பானது, 2143.73 கோடி ரூபாய் அதிகரித்து, 4,77,910.85 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வட்டி விகிதம்
அமெரிக்காவின் மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், ஆசிய சந்தைகளும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்றே சந்தையில் சென்செக்ஸ் 141.87 புள்ளிகள் அல்லது 0.24% சரிவினைக் கண்டு, 59,563.93 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டியும் 45.45 புள்ளிகள் குறைந்து, 17,465.80 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
அதானி குழும பங்குகள் சரிவு
இதே அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதானி குழும பங்குகள் 5% சரிவினைக் கண்டு, அதானி கிரீன் எனர்ஜி பங்குலள் 5% சரிவினைக் கண்டும், அதானி டோட்டல் கேஸ் விலையானது 5% சரிவினைக் கண்டும், அதானி எண்டர்பிரைசஸ் 4.98% சரிவினைக் கண்டும் முடிவடைந்துள்ளது.
ரூ.12 லட்சம் கோடி சரிவு
அதானி பவர் 4.98% சரிவிலும், என்.டி.டி.வியின் பங்கு விலையானது 4.05% சரிவிலும், அதானி வில்மர் பங்கின் விலையானது 3.35% சரிவிலும் காணப்பட்டது.
அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பானது கடந்த ஜனவரி 24-க்கு பிறகு 12,03,901.43 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications