ஒரே வாரத்தில் ரூ.2.48 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி தான் டாப் லூசர்..!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இதற்கிடையில் அதிக மதிப்புடைய 10ல் 9 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது 2,48,542.3 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

இவ்வாறு பெரும் இழப்பினை கண்ட நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் மூலதனமானது பெரும் இழப்பினை சந்தித்துள்ளது.

டாப் லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாப் லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் டாப் லூசராக உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 56,741.2 கோடி ரூபாய் குறைந்து, 16,09,686.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அமர்வில் மட்டும், இதன் பங்கு விலையானது 2.40% குறைந்து, 2,536.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்

வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்

கடந்த வாரத்தில் சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடானது 2.49% குறைந்து அல்லது 514.69 புள்ளிகள் குறைந்துள்ளது. இது தொடர்ந்து 60,000 புள்ளிகளுக்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. இந்த டாப் 10 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி மட்டும் டாப் கெயினராக உள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மதிப்பு

இதே நாட்டின் மிகப்பெரிய தனியார் துறையைச் சேர்ந்த பெரும் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது, 54,843.3 கோடி ரூபாய் குறைந்து, 8,76,5283.42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையும் வெள்ளிக்கிழமையன்று முடிவில், 0.67% குறைந்து, 1,582.85 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், வழக்கத்திற்கு மாறாக, 37,452.9 கோடி ரூபாய் குறைந்து, 12,57,233.58 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த வெள்ளிக்கிழமையன்று, 23.90 ரூபாய் குறைந்து, 3,397.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு

ஐடி துறையில் மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 27,678.78 கோடி ரூபாய் குறைந்து, 7,01,731.59 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த வெள்ளிக்கிழமையன்று 36.15 ரூபாய் குறைந்து, 1,667.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மூலதனம், 27,545.09 கோடி ரூபாய் குறைந்து, 4,03,013 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் கோடக் மகேந்திரா வங்கியின் பங்கு விலையானது, 3.21% குறைந்து, 2,031.15 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பைனான்ஸ் மதிப்பு

பஜாஜ் பைனான்ஸ் மதிப்பு

தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 18,774.8 கோடி ரூபாய் குறைந்து, 4,46,801.66 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 84.05 ரூபாய் குறைந்து, 7,400.20 ரூபாயாக உள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 14,356 கோடி ரூபாய் குறைந்து, 5,62,480.40 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் சற்று அதிகரித்து, 2,393.15 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மதிப்பு

ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மதிப்பு

இதே முன்னணி நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம், 10,659.37 கோடி ரூபாய் குறைந்து, 5,14,217.69 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் ஹெச்டிஎஃப்சி-யின் பங்கு விலையானது, 56.10 ரூபாய் சரிந்து, 2,844.70 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் சந்தை மூலதனம், 490.86 கோடி ரூபாய் குறைந்து, 4,48,372.48 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் எஸ்பிஐ-யின் பங்கு விலையானது, சற்று அதிகரித்து, 502.15 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது, 30,010.44 கோடி ரூபாய் அதிகரித்து, 5,56,507.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில், சற்று அதிகரித்து 802.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியல்

அதுவும் சந்தை மதிப்புடைய நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸை தொடர்ந்து இரண்டாவதாக டிசிஎஸ் நிறுவனமும், மூன்றாவதாக ஹெச்டிஎஃப்சி நிறுவனமும், இதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்டவை அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+