இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சற்றே சரிவை கண்டிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் அடுத்த ஒரு மாத காலத்தில் கணிசமான வளர்ச்சியை காணும் என முதலீட்டு நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த 9 பங்குகள் அடுத்த மூன்று முதல் நான்கு வார காலத்தில் 4- 16 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என சொல்லப்படுகிறது.
அதானி போர்ட்ஸ் (Adani ports) -அதானி குழுமத்திற்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 1480 ரூபாய் முதல் 1520 ரூபாய்க்குள் வர்த்தகமாகி வருகிறது. இந்த பங்கினை பொறுத்தவரை 1650 ரூபாய் வரை அதாவது தற்போது உள்ளதை விட 7 சதவிகிதம் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிப்லா (Cipla) - இந்த நிறுவனத்தை பொறுத்தவரை ஒரு பங்கின் மதிப்பு 1485 ரூபாய் முதல் 1535 ரூபாய்க்குள் வர்த்தகமாகி வருகிறது. இந்த பங்கின் மதிப்பானது தற்போது இருக்கும் நிலவரத்தை விட 4 சதவீதம் உயர்ந்து 1635 ரூபாய் வரை வளர்ச்சி அடையும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank): தற்போது 72 ரூபாய் முதல் 75 ரூபாய்க்குள் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. இது 13% அதிகரித்து 84 ரூபாய் என்ற அளவை எட்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்(Gujarat mineral development corporation) - இந்த நிறுவனத்தின் பங்கு 397 ரூபாயிலிருந்து 406 ரூபாய்க்குள் வர்த்தகமாகி வருகிறது. இது 15 சதவிகிதம் வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறும் முதலீட்டு நிபுணர்கள் ஒரு பங்கின் மதிப்பு 462 ரூபாய் வரை எட்ட கூடும் என தெரிவிக்கின்றனர்.
பி.எஃப்.யுடிலிட்டிஸ் (BF Utilities) - இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 800 ரூபாயிலிருந்து 816 ரூபாய்க்குள் வர்த்தகமாக வருகிறது .இது அடுத்த மூன்று முதல் நான்கு வார காலத்திற்கு 16 சதவீதம் வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு பங்கின் மதிப்பு 940 ரூபாய் வரை எட்ட கூடும் என்றும் நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
கம்மின்ஸ் இந்தியா (Cummins india) - இதன் பங்கு மதிப்பு தற்போது 3670 ரூபாயிலிருந்து 3750 க்குள் வர்த்தகமாகி வருகிறது. இது 13 சதவீத வளர்ச்சி காணும் எனக் கூறும் பங்குச்சந்தை ஆய்வாளர்கள் ஒரு பங்கின் மதிப்பு 4200 ரூபாய் என்ற அளவை எட்டும் என கணிக்கின்றனர்.
பிராமல் எண்டர்பிரைசஸ் (Piramal enterprises) - தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 980 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறது. இது 13% வரை உயர்ந்து 1125 ரூபாய் வரை அதிகரிக்கும் என ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
குவெஸ் கார்ப் (Quess corp)- 685 முதல் 673 ரூபாய் வரை தற்போது இது வர்த்தகமாகிறது. விரைவில் இது 10 சதவிகிதம் வரை உயர்ந்து 785 ரூபாயை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அசோக் லேலாண்ட் (Ashok Leyland)-இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 242 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இது 16 சதவீதம் வரை உயர்ந்து 285 ரூபாய் வரை எட்டு கூடும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika


Click it and Unblock the Notifications