இந்திய பங்குச் சந்தையில் "ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் செக்மென்ட்" (EDS) என்ற பகுதியில் தனிப்பட்ட வர்த்தகர்களின் நிகர லாபம் மற்றும் இழப்புகளை ஆய்வு செய்தபோது, 2025ஆம் நிதியாண்டில் சுமார் 91% தனிப்பட்ட வர்த்தகர்கள் நிகர இழப்பை சந்தித்திருப்பதாக SEBI தெரிவித்துள்ளது. இது 2024 நிதியாண்டிலும் அதே போல் இருந்தது. பெரும்பான்மையான தனிப்பட்ட வர்த்தகர்கள் இச்சந்தையில் லாபம் பெறவில்லை என்பதையும், இந்த சந்தையில் முதலீடு செய்யும் போது அதிக கவனம் மற்றும் அறிவுடன் செயல்பட வேண்டும் என்பதையும் இதை காட்டுகிறது.
சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆய்வில், ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் பகுதியில் உள்ள இன்டெக்ஸ் ஆப்ஷன்கள் வர்த்தகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது, பிரீமியம் அளவுகளில் 9% குறைவும், Notional அளவுகளில் 29% குறைவும் ஏற்பட்டுள்ளது. இது, ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் சமீபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதையும், கேஷ் மார்க்கெட் வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடுகையில் இந்த குறைவு குறிப்பிடத்தக்கவை என கூறப்படுகிறது.

SEBI நடத்திய ஆய்வில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பிடுகையில், இன்டெக்ஸ் ஆப்ஷன்களின் வர்த்தக அளவு பிரீமியம் அடிப்படையில் 14% வளர்ச்சி மற்றும் Notional அடிப்படையில் 42% அதிகரிதுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தனிப்பட்ட வர்த்தகர்களின் EDS பிரீமியம் அடிப்படையிலான வர்த்தக பரிமாற்றம் கடந்த ஒரு ஆண்டில் 11% குறைந்துள்ளது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்னர் 36% அதிகரித்துள்ளது. இதன் மூலம், குறுகிய காலத்தில் சில வீழ்ச்சிகள் இருந்தாலும், மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் வர்த்தகம் வளர்ச்சி காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் செக்மென்ட் (EDS) பகுதியில் வர்த்தகம் செய்பவர்களின் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்த்தால், அந்த எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது. எனவே, கடந்த ஆண்டு சில பேர் சந்தையில் இருந்து வெளியேறினாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய முதலீட்டாளர்கள் வந்துள்ளனர்.
இந்தியா மற்ற சந்தைகளுடன் ஒப்பிடுகையில், குறிப்பாக இன்டெக்ஸ் ஆப்ஷன்களில், ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் செக்மென்டில் (EDS) வர்த்தகம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. SEBI, முதலீட்டாளர்களின் நன்மைகளையும் சந்தையின் சீர்திருத்தத்தையும் பாதுகாக்க, இன்டெக்ஸ் ஆப்ஷன்களின் பரிமாற்ற போக்குகளை எப்போதும் கவனித்து ஆய்வு செய்து வருகிறது.
வர்த்தகம் அதிகரிப்பதுடன், அதற்கான ஆபத்துக்களை கண்காணிக்க தேவையான அளவுகோல்கள் இருக்க வேண்டும் என்பதற்காக SEBI சில புதிய நடவடிக்கைகள் அறிவித்துள்ளது. டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் உள்ள ஆபத்துக்களை சிறந்த முறையில் கண்காணித்து வெளிப்படுத்துதல், தனி பங்குகளின் டெரிவேட்டிவ்ஸ் மீது தவறான காரணங்களால் விதிக்கப்பட்ட தடைகளை குறைப்பது ஆகும். இந்த நடவடிக்கைகளின் விளைவுகளை வெளிப்படுத்த, டிசம்பர் 2024 முதல் மே 2025 வரை உள்ள காலத்தில் தனிப்பட்ட முதலீட்டாளர்களும், பொது முதலீட்டாளர்களும் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் SEBI ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம், மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளின் செயல்திறன் மற்றும் சந்தை நிலைமையை உணர்வதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications