இந்திய பங்குச் சந்தையில் சில பென்னி ஸ்டாக்குகள் திடீரென வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை தந்துவிடும். அந்த வகையில் பாப்பிஸ் கேர்ஸ் (Popees Cares )என்ற நிறுவனத்தின் பங்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 8,861 சதவீதம் உயர்ந்துள்ளது.
பாப்பிஸ் கேர்ஸ் நிறுவனத்தின் பங்கு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.8 ரூபாய் என்ற அளவில் இருந்தது தற்போது அது 161.30 ரூபாய் என அதிகரித்துள்ளது. இந்த பிரம்மாண்ட வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் 2021 ஆம் ஆண்டில் கூட இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.5 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அதன் பின்னர் தான் இதன் மதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

கடந்த ஓராண்டு காலத்தில் கூட இந்த நிறுவனத்தின் பங்கு 1634% லாபத்தை தந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த 7 மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 181% உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 22 சதவீதம் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது . இந்த நிறுவன பங்கு மதிப்பினை பொருத்தவரை 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 9.48 ரூபாய், 52 வார காலம் அதிகபட்ச மதிப்பு 161.30 ரூபாய் ஆகும்.
ஆனால் இந்த நிறுவன பங்கினை தேசிய பங்குச்சந்தை Enhanced Surveillance Measure Stage II என்கின்ற பிரிவின் கீழ் வைத்துள்ளது. அதாவது முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதி தேசிய பங்குச்சந்தை குறிப்பிட்ட சில நிறுவனங்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும். இந்த பங்கினை அனைத்து நாட்களிலும் வர்த்தகம் செய்து கொள்ள முடியும். ஆனால் periodic call auctions அடிப்படையில் மட்டுமே இதை செய்ய முடியும் என தெரிகிறது.
குழந்தை பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்யக்கூடிய ஒரு நிறுவனம் இது. குறிப்பாக குழந்தைகளுக்கான ஆடைகள் ,ஷாம்பூ, சோப்புகள் டயப்பர்கள், ஹெர்பல் பவுடர்கள் உள்ளிட்டவற்றை இது விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் முதலில் அர்ச்சனா சாப்ட்வேர் லிமிடெட் என்ற பெயரில் தான் இருந்தது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இதன் பெயர் பாபிஸ் கேர்ஸ் என மாறியது. 1994 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிகோட்டை தலைமை இடமாக கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
இது நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவன பங்கு மதிப்பு வளர்ச்சியில் தான் இருக்கும் என கூறும் ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம், முதலீட்டாளர்கள் சற்றே கவனத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றது. ஏனெனில் நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் குறைந்து இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications