இந்திய பங்கு ச்சந்தையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்கு மதிப்புகளின் வளர்ச்சி நம்மை திக்கு முக்காட வைத்து விடுகிறது. அப்படி கடந்த ஓராண்டு காலத்திலேயே முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் தந்த ஒரு பங்கு குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.
எலைட்கான் இன்டர்நேஷனல் என்பது இந்தியாவை சேர்ந்த ஒரு எஃப்எம்சிஜி நிறுவனம் . புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம் , இதன் பிரதான தயாரிப்பு புகையிலை பொருட்கள்.

முதலில் காசிராம் ஜெயின் கம்பெனி என அறியப்பட்டது தான் தற்போது எலைட்கான் இன்டர்நேஷனல் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை பொருத்தவரை 20க்கும் அதிகமான பிரீமியம் பொருட்களை விற்பனை செய்கிறது. 50க்கும் அதிகமான நாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்கிறது. ஒரு மாதத்திற்கு 80 மில்லியன் சிகரெட் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாக இந்த நிறுவனம் இருக்கிறது .
எலைட்கான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஓராண்டிலேயே பல மடங்கு உயர்ந்திருக்கிறது . செப்டம்பர் 24 ஆம் தேதியான இன்று நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 215 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவன பங்கு மதிப்பை பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களிலேயே முதலீட்டாளர்களுக்கு 618 சதவீத லாபத்தை பெற்று தந்திருக்கிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சுமார் 7300 சதவீதம் லாபம் பெற்றுத்தந்து முதலீட்டாளர்களுக்கு பண மழையை கொட்டி தந்து இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் என பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20 ,000 சதவீதம் உயர்ந்திருக்கிறது . நடப்பாண்டில் மட்டும் அதாவது ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து தற்போது வரையிலான காலத்தில் மட்டும் 1600 சதவீதம் உயர்வு கண்கிருக்கிறது.
இந்திய பங்குச்சந்தையே பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்னும் பழைய நிலையை எட்டவில்லை ஆனால் இந்த ஒரு பங்கு மட்டும் இந்த ஒன்பது மாதங்களில் 1600 சதவீதம் உயர்ந்திருக்கிறது . கடந்த ஆண்டில் வெறும் 2.51 ரூபாயாக இருந்த எலைட் கான் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு தற்போது 215 ரூபாய் என சுமார் 7300 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்றைய சந்தை நிலவரத்தின்படி பார்க்கும்போது கடந்த ஆண்டு இதில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 76 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்றிருக்கும் .
இந்தியா மட்டுமல்ல ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் , ஹாங்காங், பிரிட்டன் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 32745 கோடி ரூபாயாக இருக்கிறது . இந்த நிறுவனத்தின் வருமானம் 2025 ஆம் ஆண்டில் 551 கோடி ரூபாயாக இருக்கிறது இதில் லாபம் மட்டுமே 70 கோடி . இதன் பங்கில் 59.5% ப்ரமோட்டோர்கள் வசமும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் 38 சதவீத பங்குகளும் சில்லரை முதலீட்டாளர்கள் வசம் 2.24 சதவீத பங்குகளும் இருக்கின்றன .
இந்த பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 2.82 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 422 ரூபாய். தற்போது தன்னுடைய 52 வார காலம் உச்சபட்ச மதிப்பிலிருந்து தள்ளுபடி விலையில் தான் இந்த நிறுவன பங்கு என்பது வர்த்தகமாகி வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications