பங்குச் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றின் பங்குகளின் பண புழக்கத்தை அதிகரிக்க பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்குகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் ஏராளமான முதலீட்டாளர்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பென்னி பங்கு ஆக இருந்து மல்டிபேக்கர் வருவாயை வழங்கிய நிறுவனங்களின் பங்கு பிரிப்பு என்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ஷ்டம்தான். அந்த வகையில், தற்போது பென்னி பங்கு ஆக இருந்து மல்டிபேக்கர் ஆன ஏஏ பிளஸ் டிரேட்லிங்க் லிமிடெட் ஒரு பங்கு பிரிவை அறிவித்துள்ளது. அதன்படி 10:1 என்ற விகிதத்தில் பங்குகள் பிரிக்கப்படவுள்ளது.
தற்போதுள்ள முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஈக்விட்டி பங்கின் முக மதிப்பு ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு 10 புதிய பங்குகளாகப் பிரிக்கப்படும். இந்த நடவடிக்கை நிறுவனத்தின் பங்குகளின் பணப்புழக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான பங்குப் பிரிப்புக்கான பதிவு தேதியை புதன்கிழமை, ஜனவரி 08, 2025 என நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் இணைக்கப்பட்ட, ஏஏ பிளஸ் டிரேட் லிங்க் நிறுவனம் ஆனது இரும்பு & எஃகு, அலுமினியம், கிராஃபைட் மற்றும் பிற அலாய் தயாரிப்புகளால் செய்யப்பட்ட தயாரிப்புகளில் வர்த்தகம் செய்கிறது. அலுமினிய ஜன்னல்களை கண்ணாடியுடன் பொருத்துவதற்கும், இறுதி முதல் இறுதி வரை சப்ளை செய்வதற்கும் பில்டர்களிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று வருகிறது. நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.34.98 கோடியாக உள்ளது.
செப்டம்பர் 2024 இல், நிறுவனத்தின் புரோமோட்டர்கள் நிறுவனத்தில் 14.58 சதவீத பங்குகளை விற்றுள்ளனர். இது மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது அவர்களின் பங்குகளை 6.74 சதவீதமாகக் குறைத்துள்ளனர். பங்கு அதன் புத்தக மதிப்பை விட 0.78 மடங்கு வர்த்தகம் செய்யப்பட்டு 100 சதவீதத்திற்கும் அதிகமான மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது. அதன் 52 வாரக் குறைந்த விலையில் இருந்து ஒரு பங்கு விலை ரூ.7.01 ஆக இருக்கும்.
இதற்கிடையில், இன்று,ஏஏ பிளஸ் ட்ரேட்லிங்க் நிறுவனத்தின் பங்குகள், அதன் முந்தைய முடிவான ரூ.13.70-ல் இருந்து 4.80 சதவீத உயர்வில் ரூ.15.07 ஆக வர்த்தகமாகி வருகிறது. இந்த பங்குகளின் 52 வார அதிகபட்சம் ரூ.26.88 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூ.7.01 ஆகவும் உள்ளது.
More From GoodReturns

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications