இந்தியாவை சேர்ந்த நானோகேப் நிறுவனம் ஒன்று தங்களது நிறுவன பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பிரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது .ஆயுஷ் வெல்னஸ் என்ற நிறுவனம் ஹெர்பல் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 300 ரூபாய்க்கும் கீழ் உள்ளது. இந்த நிறுவனம் கூடிய விரைவில் தங்களுடைய ஒரு பங்கினை பத்து பங்குகளாக பிரிக்க போகிறோம் என அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்க போகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி இதற்கான எக்ஸ்-டேட்டாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆயுஷ் வெல்னஸ் லிமிடெட் நிறுவனம் சுமார் 94 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது. இந்த நிறுவன ம், தங்களுடைய நிறுவன பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பிரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதாவது 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கானது 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட பத்து பங்குகளாக பிரிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் 19ஆம் தேதி இந்த நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இதனை அடுத்து நடைபெற்ற நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் பங்குகளை பிரிப்பதற்கான ரெக்கார்ட் டேட் ஆகஸ்ட் 5 என்றும் கூறியுள்ளது. எனவே ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த நிறுவனத்தில் யாரெல்லாம் பங்குகளை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த பங்கு பிரிப்பானது பொருந்தும்.
ஆயுஷ் வெல்னஸ் நிறுவனத்தை பொருத்தவரை இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ஜூலை 31ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இரண்டு சதவீதம் உயர்ந்து 294 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
இந்த நிறுவன பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 1000 சதவீதம் லாபத்தை தந்துள்ளது. இதன் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 21 ரூபாய் ,52 வார கால அதிகபட்ச மதிப்பு 313 ரூபாய்.
ஆயுஷ் வெல்னஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவன பங்கின் புக் வேல்யூ 15. 15 ஆகும். நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் 8. 6 5 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனப் பங்கு மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே வர்த்தகமாகிறது. இந்த நிறுவன பங்குகளை 100% சில்லறை முதலீட்டாளர்களே வைத்திருக்கின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications