உஷார்..! 7 நிறுவனங்களில் பங்குகளை விற்ற பிரபல முதலீட்டாளர்.. இந்த பங்கு உங்களிடம் இருக்கா?

இந்தியாவின் வாரன் பஃபெட்களில் ஒருவர் என்று பெருமையாக அழைக்கப்படுபவர் ஆஷிஷ் கச்சோலியா. 1999ல் இந்தியாவின் முதல் டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஹங்காமா டிஜிட்டல் நிறுவனத்தை மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரும் பிக் புல் என்று அழைக்கப்பட்டவருமான ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவுடன் இணைந்து தொடங்கியவர்தான் இந்த ஆஷித் கச்சோலியா. இவரை பிக் வேல் (பெரிய திமிங்கலம்) என்று அன்பாக அழைக்கின்றனர். இவர் பெரும்பாலும் மல்டிபேக்கர் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்.

இவரது போர்ட்போலியாவில் மொத்தம் 42 நிறுவன பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2,892 கோடியாகும். விருந்தோம்பல், கல்வி மற்றும் உற்பத்தி போன்ற துறைகளை சேர்ந்த பங்குகளில் அதிகமாக முதலீடு செய்துள்ளார்.

உஷார்..! 7 நிறுவனங்களில் பங்குகளை விற்ற பிரபல முதலீட்டாளர்.. இந்த பங்கு உங்களிடம் இருக்கா?

ஆஷிஷ் கச்சோலியா கடந்த டிசம்பர் காலாண்டில் யுனிவர்சல் ஆட்டோஃபவுண்ட்ரி உள்ளிட்ட 7 நிறுவன பங்குகளில் தனது மூலதனத்தை குறைத்துள்ளார். வாரன் பஃபெட்டின் சீடரான இவர் பங்குகளை விற்பனை செய்கிறார் என்றாலே ஏதாவது முக்கிய காரணம் இருக்கும்.

யுனிவர்சல் ஆட்டோஃபவுண்ட்ரி லிமிடெட்

இந்நிறுவனம் க்ரே இரும்பு டக்டைல் இரும்பு மற்றும் எஸ்ஜி இரும்பு வார்ப்பு உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சர்வதேச உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் தனது பங்கு மூலதனத்தை 3.59 சதவீதமாக கச்சோலியா குறைத்து இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இறுதியில் இந்நிறுவனத்தில் கச்சோலியா பங்கு 8.32 சதவீதமாக இருந்தது. இந்நிறுவனத்தின் நிகர லாப வளர்ச்சி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

உஷார்..! 7 நிறுவனங்களில் பங்குகளை விற்ற பிரபல முதலீட்டாளர்.. இந்த பங்கு உங்களிடம் இருக்கா?

ஏடபுள்யூஎஃப்ஐஎஸ் ஸ்பேஸ் சொல்யூஷன்ஸ்

ஏடபுள்யூஎஃப்ஐஎஸ் ஸ்பேஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் நாட்டின் முன்னணி பணியிட தீர்வு வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் பெரிய திமிலங்கம் தனது பங்கு மூலதனத்தை 4.77 சதவீத்திலிருந்து 3.89 சதவீதமாக குறைத்துள்ளார். இந்நிறுவனம் இன்னும் லாபத்தை கண்ணில் காட்டவில்லை. அதேசமயம் தனது நஷ்டத்தை இந்நிறுவனம் குறைத்து வருகிறது. 2019 நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.62 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.18 கோடியாக குறைந்தது.

பாசிலிக் ஃப்ளை ஸ்டுடியோ

பாசிலிக் ஃப்ளை ஸ்டுடியோ நிறுவனம் விஎஃப்எக்ஸ் துறையில் முன்னணியில் உள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் தனது பங்கு மூலதனத்தை 1.99 சதவீதத்திலிருந்து 1.19 சதவீதமாக கச்சோலியா குறைத்துள்ளார். மேலும், கச்சோலியா கடந்த டிசம்பர் காலாண்டில், ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தில் 2.52 சதவீதத்திலிருந்து 2.00 சதவீதமாகவும், ஜாகிள் ப்ரீபெய்டு ஓஷன் சர்வீசஸ் நிறுவனத்தில் 2.37 சதவீதத்தில் இருந்து 2.16 சதவீதமாகவும், பாலு போர்ஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 1.82 சதவீதத்திலிருந்து 1.73 சதவீதமாகவும், வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் 3.17 சதவீதத்திலிருந்து 3.16 சதவீதமாகவும் தனது பங்கு மூலதனத்தை குறைத்துள்ளார்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+