பணத்தை கொட்டிய டோலி கன்னா.. உங்களிடம் இருக்கா இந்த 2 மல்டிபேக்கர் பங்குகள்

பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் டோலி கன்னா. பங்குச் சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால்தான் நமது முதலீடு அபரிமிதமான செல்வ மதிப்பை உருவாக்கும். இந்த அணுகுமுறை அப்படியே பின்பற்றுபவர் டோலி கன்னா. பல்வேறு துறைகளை சேர்ந்த பல்வேறு வகையான நிறுவனங்கள் அவரது முதலீடுகளில் இடம் பெற்றுள்ளன. இவர் பெரும்பாலும் விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை செய்த பிறகே முதலீடு செய்கிறார்.

பணத்தை கொட்டிய டோலி கன்னா.. உங்களிடம் இருக்கா இந்த 2 மல்டிபேக்கர் பங்குகள்

இது அவரது வளர்ச்சி வாய்ப்புகள அடையாளம் காணும் அவரது திறனை வெளிப்படுத்துகிறது. டிரெண்ட்லினி டாட் காம் தரவுகளின்படி, டோலி கன்னா தற்போது 17 நிறுவன பங்குகளில் மொத்தம் ரூ.365 கோடி முதலீடு செய்துள்ளார். டோலி கன்னா அண்மையில் தனது போர்ட்ஃபோலியாவில் உள்ள 2 நிறுவன பங்குகளில் முதலீட்டை அதிகரிப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. அந்த நிறுவனங்களிடம் சில பாசிட்வான விஷயங்கள் இருந்தாலும், அந்த நிறுவன பங்குகளின் விலை அவற்றின் உச்ச விலையிலிருந்து 40 சதவீதத்துக்கு மேல் வீழ்ந்து மலிவான விலையில் உள்ளன.

டோலி கன்னா முதலீட்டை அதிகரித்த அந்த 2 நிறுவன பங்குகள், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பிரகாஷ் பைப்ஸ் லிமிடெட்.

பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இந்நிறுவனம் ஸ்டீல் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.மேலும் மின் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. 2023 செப்டம்பர் முதல் இந்நிறுவனத்தில் கணிசமான பங்கு மூலதனத்தை கொண்டு இருந்தார். 2024 டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்தில் 1.28 சதவீத பங்கு மூலதனத்தை வைத்திருந்தார். இது 2025 மார்ச் காலாண்டில் 2.07 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்நிறுவனம் தனது கடனை படிப்படியாக குறைத்து ரூ.661 கோடியிலிருந்து ரூ.378 கோடியாக குறைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 566 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.24 என்ற அளவில் இருந்த பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு விலை தற்போது ரூ.170ஆக உள்ளது. இருப்பினும் இப்பங்கின் விலை அதன் உச்ச விலையை காட்டிலும் சுமார் 33 சதவீதம் குறைவாக உள்ளது. 2024 ஆகஸ்ட் 27ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே புதிய 52 வார உச்சமான ரூ.237.25ஐ எட்டியது.

பிரகாஷ் பைப்ஸ் லிமிடெட்
முன்பு பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த நிறுவனம்தான் பிரகாஷ் பைப்ஸ் லிமிடெட். முந்தைய நிறுவனத்திலிருந்து 2017ல் தனி நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பிரகாஷ் பைப்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் பிவிசி பைப்ஸ் மற்றும் பைப்ஸ் ஃபிட்டிங்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாகும். 2021 டிசம்பர் முதல் டோலி கன்னா இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்து வருகிறார். 2024 டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, இந்நிறுவனத்தில் 3.71 சதவீத பங்கு மூலதனத்தை வைத்திருந்தார். இது 2025 மார்ச் காலாண்டில் 4.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிரகாஷ் பைப்ஸ் நிறுவனம் 32.7 சதவீதம் ஆர்ஓசிஇ கொண்டுள்ளது. அதாவது இந்நிறுவனம் மூலதனமாக செலவிடும் ஒவ்வொரு ரூ.100க்கும் ரூ.32க்கு மேல் சம்பாதிக்கிறது. இது அந்நிறுவனத்தின மூலதனத் திறன் சிறப்பாக உள்ளதே இது வெளிப்படுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,265 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.28 என்ற அளவில் இருந்த பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு விலை தற்போது ரூ.401.25ஆக உள்ளது. இருப்பினும் இப்பங்கின் விலை அதன் உச்ச விலையை காட்டிலும் சுமார் 40 சதவீதம் குறைவாக உள்ளது. 2024 செப்டம்பர் 5ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே புதிய 52 வார உச்சமான ரூ.667.90ஐ எட்டியது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+