அதானி குழுமத்தில் என்ன நடக்குது.. 3 நிறுவனங்கள் ஏற்றம்.. மற்ற நிறுவனங்களின் நிலை கவலைக்கிடம் தான்!

அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் & செஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் இன்று பங்கு சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட பங்குகள் இன்றும் இரண்டாவது நாளாக 5% எனும் அளவுக்கு சரிந்து லோவர் சர்க்யூட் ஆகியுள்ளன.

அதானி குழுமத்தினை சேர்ந்த பல்வேறு பங்குகள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இதில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சர்வதேச சந்தையானது மந்த நிலையில் காணப்படும் நிலையில், ஈக்விட்டிகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

முன்கூட்டியே கடன் அடைத்தல்

முன்கூட்டியே கடன் அடைத்தல்

அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து கடனை முன்கூட்டியே திரும்பி அடைத்து வரும் நிலையில், 2.65 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை திரும்ப செலுத்தியுள்ளது. இதற்கான கால அவகாசம் என்பது இருந்தாலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க முயற்சி எடுத்து வருகின்றது.

 விரைவில் முற்றுப்புள்ளி வரலாம்

விரைவில் முற்றுப்புள்ளி வரலாம்

ஹீண்டர்ன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் குறித்து பற்பல சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் 6 பேர் அடங்கிய ஒரு குழுவினை இதனை விசாரிக்க நியமித்தது. இந்த குழுவானது 2 மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதில் முன்னாள் நீதிபதி உள்பட 6 பேர் அடங்குவர். ஆக இது அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

பல சர்ச்சைகள்

பல சர்ச்சைகள்

எனினும் இப்படி பற்பல சர்ச்சைகள் என்பது நிலவி வந்தாலும் அதானி குழுமத்தில் மீண்டும் அன்னிய முதலீடுகள் என்பது குவியத் தொடங்கியுள்ளது;. சில வாரங்களுக்கு முன்பு GQG பார்ட்னர்ஸ் நிறுவனம் 15,446 கோடி ரூபாய் முதலீட்டினை செய்தது. அதோடு மீண்டும் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இது மேலும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முடியவே முடியாது?

முடியவே முடியாது?

முதலீட்டாளர்கள் மத்தியில் இப்படி எனில் மறுபுறம் லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் சட்டப்படி எந்த நிறுவனத்தின் கடன் விவரத்தையும் வெளியிட முடியாது. இதில் அதானி நிறுவனமும் விதிவிலக்கல்ல என கூறியுள்ளார். இது மேற்கொண்டு எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது எனலாம்.

எது உண்மை?

எது உண்மை?

மொத்தத்தில் அதானி குழும நிறுவனங்கள் உண்மைக்கு புறம்பாக பொய்யான அறிக்கையினை காட்டினவா? இதன் மூலம் பங்கு சந்தையில் லாபம் பார்த்தனவா? ஷெல் நிறுவனங்கள் என்பது உண்மையா? என பல குற்றச்சாட்டுகள் குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகள் கடுமையாக சரிவினைக் கண்டு வருகின்றன.

தொடரும் சரிவு

தொடரும் சரிவு

இடையில் அதானி குழுமத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பல அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், சில பங்குகள் ஏற்றத்தினை கண்டு வந்தாலும், பல பங்குகள் இன்றும் சரிவிலேயே காணப்படுகின்றன. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவானது என்ன சொல்லப்போகிறது. ஹிண்டர்ன்பர்க் அறிக்கை என்பது எந்தளவுக்கு உண்மை? என பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்போது தான் உண்மை என்பது தெரிய வரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+