FPO: சிறு முதலீட்டாளர்களுக்கு அதானி கொடுத்த வாய்ப்பு.. நீங்க தயாரா?

இந்திய தொழிலதிபரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பானது கடந்த ஆண்டு, 40 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்தது. இது அதானி குழும பங்குகள் பலவும் கடந்த ஆண்டு உச்சத்தினை எட்டிய நிலையில் அதிகரித்தது.

இதற்கிடையில் தொடர்ந்து பல துறைகளில் அதானி குழும நிறுவனம் முதலீடுகளை செய்து வருகின்றது. இது பற்பல நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வருகின்றது.

இதற்கு தேவையான முதலீடுகளை பலவைகையிலும் அதானி குழுமம் திரட்டி வருகின்றது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டினை செய்ய உள்ளது. இதன் மூலம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது. இந்த வெளியீடானது ஜனவரி 27 அன்று தொடங்கவுள்ளது. ஜனவரி 31 அன்று முடிவடையவுள்ளது. இந்த உரிமை பங்கு வெளியீட்டில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், பங்கின் விலையானது, தள்ளுபடி விலையாக 3112 - 3276 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சில்லறை முதலீட்டாளர்களை ஈர்க்கலாம்

சில்லறை முதலீட்டாளர்களை ஈர்க்கலாம்

இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 9 - 13% வரையில் குறைவான விலையிலேயே கிடைக்கிறது. ஆக சில்லறை முதலீட்டாளர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதன் தற்போதைய விலையானது 3463 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. ஆக இது மிக சிறந்த வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வெளியீடானது சில்லறை முதலீட்டாளர்களை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக இந்த நிதி?

எதற்காக இந்த நிதி?

ஆக இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது இதன் வணிக விரிவாக்கம், கடன் மறு நிதியளிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வெளியீட்டில் பங்கினை 4ன் மடங்கில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்திலேயே அதானி எண்டர்பிரைசஸ் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது செய்யப்படவுள்ளது.

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்

அதானி குழுமத்தியின் இந்த அறிவிப்பானது நிச்சயம் சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். அதானி குழும நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியினை எட்டலாம். இது மேற்கொண்டு இந்த பங்குகள் அதிகரிக்க காரணமாக அமையலாம். இது முதலீட்டாளர்களுக்கு லாபகரமான வாய்ப்பாகவும் அமையலாம்.

அதானியில் செம திட்டம்

அதானியில் செம திட்டம்

இது ஒரு புறம் எனில், மறுபுறம் அதானி குழும நிறுவனங்களின் சாலைகள், விமான நிலையங்கள், மற்ற தொழில்கள் என அனைத்தும் தனித் தனியாக 2026 - 2029-க்குள் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் இதற்கான நடவடிக்கையை அதானி குழுமம் தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பான மூலதனத்தினை நிறுவனம் திரட்ட திட்டமிடுகின்றது.

வளர்ச்சிக்கு காரணமாக அமையும்

வளர்ச்சிக்கு காரணமாக அமையும்

இது மேற்கொண்டு முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம், அதிகளவில் கடனை வாங்கி குவிப்பதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதானி குழுமமோ அதனை மறுத்தது. உண்மையில் கடனை வாங்கினாலும், அது பாதுகாப்பான எதிர்கால நலன் கருதியே நிதியினை அதானி குழுமம் திரட்டி வருகின்றது. இது மேற்கொணடு அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக அமையும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+