அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த வாரம் அதன் உரிமை பங்கு வெளியீட்டினை தொடங்கியது. இந்த வெளியீட்டின் மூலம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளதாக அறிவித்தது.
அதானி குழுமத்தின் இந்த வெளியீட்டுக்கு மத்தியில், அமெரிக்காவினை சேர்ந்த ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.
இது வேண்டுமென்றே எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தவறான தகவல். முதலீட்டாளார்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்கும் விதமாக இந்த அறிக்கையானது வந்துள்ளது.
திட்டமிட்ட செயல்
குறிப்பாக நாங்கள் உரிமை பங்கு வெளியீடு மூலமாக 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது திட்டமிடப்பட்ட ஒரு செயல். ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன இதன் மூலம் ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் பலனடைய பார்க்கிறது என்றும் அதானி குழுமம் கூறியிருந்தது.
ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை
மேலும் எங்களை ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் தொடர்பு கொள்ளவே இல்லை. ஆக மேற்கொண்டு ஆவணங்கள் சரியா இல்லையா என்று கூட விசாரிக்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் இது எப்படி உண்மையாகும் என்ற கேள்வியினை எழுப்பியது. ஆனால் ஹிண்டர்ன்பர்க் நிறுவனமோ நாங்கள் 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து விட்ட அறிக்கை. இதிலிருந்து பின் வாங்க போவதில்லை என அழுத்தமாக கூறியது.
செபியும் கருத்து
இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் செபியும் இதனை துருவத் தொடங்கியுள்ளது. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் அதானி குழுமம் தொடர்ந்து தனது மிகப்பெரிய எஃப்பிஓவினையும் வெளியிட்டுள்ளது. இது மேற்கோண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கேள்வியினை எழுப்பியது.
எவ்வளவு விண்ணப்பம்?
எனினும் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்பிஓ-வில், முழுமையான பங்குகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அது அதானி குழுமம் 1.10 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளதாகவும், 5,00,84,096 பங்குகளுக்கான விண்ணப்பத்தினை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த எஃப்பிஓ-மொத்த வெளியீட்டின் மதிப்பு 4,55,06,791 பங்குகளாக உள்ளது.
அதிகளவிலான விண்ணப்பம்
இதற்கிடையில் இந்த வெளியீட்டில் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 1.26 மடங்கு விண்ணப்பத்தினை நிறுவனம் பெற்றுள்ளது. இதே நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களிடம் இருந்து 3.26% பங்கும், ஊழியர்கள் தரப்பில் 52% விண்ணப்பமும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 11% விண்ணப்பத்தினையும் நிறுவனம் பெற்றுள்ளது.
பங்கு விலை அதிகரிப்பு
இந்த எஃப்பிஓ-வில் விலையானது 3112 - 3276 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விலையானது அதிலிருந்து குறைந்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையினால் தாக்கம் இருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், அதானி குழுமத்தின் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications