பில்லியனர் கெளதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது வர்த்தக நேரத்தில் 5% மேலாக சரிந்தது. எனினும் முடிவில் 2.34% சரிந்து, 1,396.70 ரூபாயாக முடிவுற்றது.
சொல்லப்போனால் இந்த பங்கின் விலையானது இன்று காலையில் 1415 ரூபாயாக தொடங்கிய நிலையில் 1427 ரூபாய் வரை அதிகபட்சமாக சென்று திரும்பியது. குறைந்தபட்ச விலையாக 1361.55 ரூபாய் வரையில் சென்று திரும்பியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 1430.10 ரூபாயாகும்.
இதே இன்றைய முடிவு விலையானது 1396.70 ரூபாயாகவும் முடிவுற்றுள்ளது.
முதலீட்டாளர்கள் அதிருப்தி
ஒரே நாள் இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம். எனினும் இந்த சரிவானது எதிர்பார்த்த ஒன்று தான். அதெல்லாம் சரி ஏன் இந்த பங்கின் விலை இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இனியும் சரியுமா? அடுத்து என்ன செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம்.
பலத்த சரிவில் பங்கு விலை
அதானி வில்மர் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டிற்கான விண்ணப்பத்தினை தற்காலிகமாக தடை செய்துள்ளது பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி. இதற்கான சரியான காரணத்தினை சொல்லாத நிலையில், இதன் பங்கு வெளியீட்டிற்கான விண்ணப்பம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் அதானி வில்மர் நிறுவனத்தின் பேரண்டல் நிறுவனமான, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
தூள் கிளப்பிய பங்கு விலை
இந்த பங்கின் விலையானது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 500% ஏற்றத்தினை கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 195% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1,55,326.18 கோடி ரூபாயாக உள்ளது. இந்த பங்கின் விலையானது, தற்போது புல்லிஷ் டிரெண்டில் இருந்து, சற்று மோசமடைந்துள்ளது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில் கடந்த ஆகஸ்ட் 9. 2021ல் இருந்து இதன் டெக்னிக்கல் பேட்டர்ன் ஆனது, புல்லிஷ் பேட்டர்னில் இருந்து சற்று சரியத் தொடங்கியுள்ளது. இதன் சராசரியுடன் ஒப்பிடும்போது இந்த பங்கின் விலையானது பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றது.
எஃப்.எம்.சி.ஜி நிறுவனம்
பார்சூன் என்ற பிரபல சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களினையும் வணிகம் செய்யும் ஒரு எஃப்.எம்.சி.ஜி நிறுவனம், 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை, பங்கு வெளியீடு மூலம் திரட்ட திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6 மடங்குக்கு மேல் லாபம்
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 8 மடங்கு லாபத்தினை இந்த நிறுவனம் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 65.67 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 265.6 கோடி ரூபாய் லாபத்தில் உள்ளது. இதே போல வருவாயும் 131% அதிகரித்து, 12,731 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
லாபத்திற்கு என்ன காரணம்
இந்த லாப அதிகரிப்பானது சோலார் உற்பத்தி மற்றும் சுரங்க சேவை வணிகம் உள்ளிட்ட பலவற்றிலும் நல்ல லாபத்தினை கண்டுள்ள நிலையில், இந்தளவுக்கு லாபத்திற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் எபிடா விகிதம் 215% அதிகரித்து, 948 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிதியாண்டில் என்ன நிலவரம்?
இதே கடந்த 2021, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 654.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 394.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் 10 மாநிலங்களில் 22 ஆலைகள், 5,500 சப்ளையர்களையும் கொண்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications