2022ம் ஆண்டில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அங்கு கடுமையான மின் பற்றாக்குறை நிலவியது. இதனையடுத்து இறக்குமதி எரிபொருளை நம்பியிருப்பதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் வாயிலாக மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு வேகப்படுத்தியது.
அப்போது, அந்நாட்டின் வடக்கு பகுதி நகரங்களான மன்னார் மற்றும் பூனேரின் ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் வகையில் 100 கோடி டாலர் மதிப்பில் காற்றாலை பண்ணை அமைக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதேசமயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதானியின் இந்த திட்டத்துக்கு அங்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேலும் இதுதவிர, கடந்த நவம்பரில், லஞ்சம் கொடுத்து மின் ஒப்பந்தங்களை பெறுவதாக அதானி மற்றும் பிற நிர்வாகிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதனை அதானி குழுமம் மறுத்தது.
இந்த விவகாரத்தை அடுத்து, அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய தொடங்கியது. மேலும், காற்றாலை திட்டங்களிலிருந்து மின்சார உற்பத்திக்கான செலவு குறித்து அதானி குழுமத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து விலகுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் பிப்.12ம் தேதி வெளியிட்ட கடிதத்தில், காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவினை இலங்கை அரசு நியமித்துள்ள நிலையில், இலங்கையின் இறையாண்மை மற்றும் அதன் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், அந்நாட்டில் மேற்கொள்ள இருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள அதானி குழுமம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கின் விலை 3 சதவீதம் உயர்ந்து ரூ.945.95க்கு சென்றது. இருப்பினும் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.42 சதவீதம் குறைந்து ரூ.913.20ஆக சரிந்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications