அதானி குழுமத்தின் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, கடந்த 4 அமர்வுகளில் 1.73 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 3ல் இருந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
அதானி குழுமம் கடந்த வாரம் 3 பில்லியன் டாலர் மதிப்பிற்கான கடனை கடந்த வாரம் பெற்றுள்ளது. இது மேற்கொண்டு அமெரிக்காவின் ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கைக்கு பின்பு தான் அதானி குழுமம் இந்த கடனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு கடன் சலுகைகள்
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மத்தியில் பல்வேறு ரேட்டிங் நிறுவனங்களும், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் இந்த சவாலான காலகட்டத்திலும் இப்படி ஒரு கடன் சலுகைகள் மற்றும் 15, 446 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினையும் கடந்த வாரத்தில் திரட்டியுள்ளது. இதனை அமெரிக்காவின் GQG பார்ட்னர்ஸ் அறிவித்துள்ளது.
கடன் அறிவிப்புகள்
தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே ஜனவரி 24-க்கு பிறகு சரிவினைக் கண்டு வந்த அதானி குழும பங்குகள், கடந்த சில வாரங்களாகவே சரிவினைக் கண்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் வெளியான கடன் அறிவிப்புகளுக்கு மத்தியில் மீண்டும் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
எவ்வளவு மதிப்பு?
இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 8.55 லட்சம் கோடி ரூபாயாக, கடந்த மார்ச் 3ல் இருந்து ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி 27 அன்று 6.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. எப்படியிருப்பினும் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதானி எண்டர்பிரைசஸ்
கடந்த 4 அமர்வுகளில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது அதிகளவில் அதிகரித்துள்ளது. இது 57.37% அதிகரித்து, 1879.35 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வெள்ளிக்கிழமையன்று 1194.20 ரூபாயாகவும் இருந்தது.
19% வரையில் ஏற்றம்
இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 21.77% ஏற்றத்திலும், அதானி வில்மர் பங்கு விலையானது 21.53% ஏற்றத்திலும், அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 21.53% ஏற்றத்திலும், அதானி பவர் பங்கு விலையானது 21.47% ஏற்றத்திலும், என்.டி.வி.வி பங்கின் விலையானது 21.47% ஆகவும், அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி, அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட பங்குகள் 9% மற்றும் 19% வரையில் ஏற்றம் கண்டுள்ளது.
இனியும் அதிகரிக்கலாம்
இத்தகைய காரணிகளுக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் வரவிருக்கும் வாரத்திலும் ஏற்றத்தில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது அடுத்த 2 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கும் நல்ல மதிப்பில் காணப்படுகின்றது. ஆக இதுவும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சாதகமாக அமையலாம்
எல்ஐசி அதிகாரிகள் அதானி குழும அதிகாரிகளை சந்தித்ததாக கூறியுள்ள நிலையில், முதலீட்டில் எந்த பாதிப்பும் இருக்காது. முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டாம் என அறிவித்துள்ளது. ஆக இது மேற்கொண்டு வரவிருக்கும் நாட்களில் அதானி பங்குகளுக்கு சாதகமாக அமையலாம்.


Click it and Unblock the Notifications