கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், மின்சாரம், துறைமுகம், சிமெண்ட், சுரங்கம் மற்றும் எரிசக்தி உள்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதானி குழுமம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
குறிப்பாக 2023ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாக குற்றம் சாட்டியது. இதனையடுத்து அதானி குழும நிறுவன பங்குகளின் விலை 50 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது. அண்மையில், அமெரிக்க முதலீட்டாளர்களை குறிவைத்து மோசடி செய்ததாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் குற்றம் சாட்டியது குறி்ப்பிடத்தக்கது.
இது போன்ற காரணங்களால் அதானி குழும பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இந்த நிதியாண்டில் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை சரிவின் பாதையில் இருந்தது. இந்த நிதியாண்டில் இதுவரையிலான காலத்தில் (கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி) அதானி குழும நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த நிதியாண்டில் அதானி குழும நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.3.4 லட்சம் கோடி குறைந்துள்ளது. ஆக. இந்த நிதியாண்டில் அதானி குழும நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளன.
2024 மார்ச் 28ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2.90 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1.46 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த நிதியாண்டில் இந்நிறுவன பங்கின் விலை 49.50 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
இதே காலத்தில் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை 27 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.94,096 கோடி குறைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.33,029 கோடி குறைந்துள்ளது. அதாவது இந்த நிதியாண்டில் அதானி போர்ட்ஸ் பங்கின் விலை 11.40 சதவீதம் குறைந்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு 31.84 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.32,411.40 கோடி குறைந்துள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.14,546.59 கோடி குறைந்துள்ளது. அதாவது இந்நிறுவன பங்கின் விலை 18.95 சதவீதம் குறைந்துள்ளது.
அதானிக்கு சொந்தமான சிமெண்ட் நிறுவனங்களான ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகளின் விலை முறையே 23.10 மற்றும் 15.92 சதவீதம் குறைந்துள்ளது. அதானி வில்மர் பங்குகளின் சந்தை மதிப்பு 17.35 சதவீதம் குறைந்துள்ளது. சங்கி இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 36.84 சதவீதம் குறைந்துள்ளது.
மின்சார துறையில் சாதகமான நிலவரங்கள் காணப்பட்டபோதிலும், அதானி பவர் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு 2.11 சதவீதம் குறைந்துள்ளது. அதானியின் ஊடக நிறுவனமான என்டிடிவி பங்குகளின் சந்தை மதிப்பு 41.58 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications