அமெரிக்காவின் பங்குச்சந்தை கண்காணிப்பாளர் அமைப்பான SEC, கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது தொடுத்த வழக்கு, இந்திய பங்குச்சந்தையை அதிர வைத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை, SEC மற்றும் FBI, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அசூர் பவர் குளோபல் நிறுவனத்தின் நிர்வாகி சிரில் கபனஸ் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதில் முக்கியமாகப் பங்குச்சந்தை மோசடி, வயர் மோசடி மற்றும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் திட்டங்களைப் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் பங்குச்சந்தையைத் தாண்டி மத்திய மாநில அரசுகளை அதிர வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் காரணமாகக் காலை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் அதிகப்படியாக 20 சதவீதம் வரையில் சரிந்து 2.2 லட்சம் கோடி ரூபாய் வரையிலான சந்தை மதிப்பீட்டை இழந்தது. இதன் மூலம் அதானி குழுமத்தின் பங்கு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டனர்.

ஆனால் அமெரிக்க நீதித்துறையின் வழக்கு, பிடிவாரன்ட் குறித்து கௌதம் அதானி விளக்கம் கொடுத்த நிலையில் அதானி குழுமப் பங்குகள் கணிசமாக மீண்டது. கௌதம் அதானி தனது விளக்கத்தில், எங்களுடைய வர்த்தகத்தில் அனைத்து விதமான விதிமுறைகளுக்கும் உட்பட்டுச் செயல்பட்டு உள்ளோம், அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அடிப்படையற்றது, அதைக் கடுமையாக மறுக்கிறோம். மேலும் இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் 2 மணியளவில் சிறிய அளவில் உயர்ந்தாலும், வர்த்தகம் முடியும் போது மீண்டும் பழைய நிலைக்க திரும்பி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் - 22.62 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் & SEZ - 13.53 சதவீதம் சரிவு
அதானி பவர் - 9.15 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 20.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 18.80 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 10.40 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 9.98 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 7.29 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 11.98 சதவீதம் சரிவு
NDTV - 0.06 சதவீதம் சரிவு
சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 6.26 சதவீதம் சரிவு
அமெரிக்காவின் பங்குச்சந்தை கண்காணிப்புக் குழு (SEC) கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது சிவில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விவரங்கள் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நள்ளிரவு 3 மணியளவில் வெளியிடப்பட்டதும், இன்று காலை முதல் இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டின்படி, அதானி குழுமம் இந்தியாவில் மாபெரும் சோலார் திட்டங்களை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற செயல்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த லஞ்ச பணத்தை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கடனிலிருந்து பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் கௌதம் அதானி மீது பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது அதானி குழுமத்திற்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications