அதானி குழும பங்குகள் முந்தைய சில வாரங்களாகவே தொடர்ந்து கடும் வீழ்ச்சியினை கண்டு வந்த நிலையில், தற்போது அதன் 52 வார குறைந்தபட்ச விலையில் இருந்து 95 சதவீதம் ஏற்றத்தினை கண்டுள்ளது.
இது தொடர்ந்து சந்தையானது ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதானி குழும பங்குகளும் 52 வார சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தின், 15,446 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு குறித்தான அறிவிப்புக்கு பிறகு, அதானி குழும பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றன.
95% ஏற்றம் கண்ட அதானி எண்டர்பிரைசஸ்
GQG பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் பங்கினை வாங்கியுள்ளது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது எனலாம்.
குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது அதன் 52 வார சரிவில் இருந்து, 95% ஏற்றம் கண்டு, 1017.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
எவ்வளவு ஏற்றம்?
இப்பங்கானது கடந்த மார்ச் 6 அன்று 1982.85 ரூபாயாக வர்த்தகமாகியது. இதனை தொடர்ந்து அதானி போர்ட்ஸ் மற்றும் செஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 75% அதிகரித்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை பிப்ரவரி 3, 2023 அன்று 394.95 ரூபாயாக வர்த்தகமாகியது.
இதே அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், ஏச்சி பங்குகாள் முறையே 12 - 34% வரையில் அதன் 52 வார சரிவு விலையில் இருந்து ஏற்றம் கண்டுள்ளன.
விலை அதிகரிக்கலாம்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மீண்டும் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இப்பங்குகள் 2000 ரூபாயினை எட்டியுள்ளது. இதற்கிடையில் அதானி குழும பங்குகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100% வரையில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல லாபம்
அதான் குழுமத்தினை சேர்ந்த முக்கிய பங்குகள் எண்டிடிவி, அதானி பவர், அம்புஜா சிமெண்ட்ஸ் என பல பங்குகளும் 54% மற்றும் 41% ஏற்றத்தினை கண்டுள்ளன.
இது தொடர்ந்து அதன் குறைந்தபட்ச லெவலில் இருந்து அதானி குழும பங்குகள் அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த சில தினங்களாகவே நல்ல லாபத்தினை கொடுத்துள்ளது.
பங்கினில் தாக்கம் இருக்கலாம்
அதானி குழுமத்தின் செயல்பாடுகள் என்பது மாற்றம் காணவில்லை. ஆனால் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது பங்கினில் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது. .
அதன் கடன் விகிதம் என்பது அதிகமாக இருப்பதாக தோன்றினாலும், சரியான நேரத்தில் கடன்களை செலுத்தி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் அதானி குழும கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
அதானி குழுமத்திற்கு ஆதரவு
அதானி குழும நிறுவனத்தின் சந்தை மதிப்பானது பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது மேற்கொண்டு சந்தை மதிப்பினை அதிகரிக்கவும் பயன்படலாம். அதோடு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவானது, சரியான அறிக்கையை சமர்பிக்கும்போது, இது இன்னும் அதானி குழுமத்திற்கு ஆதரவாக அமையலாம். இது அதானி குழும பங்குகள் நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம்.


Click it and Unblock the Notifications