இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக அதானி குழுமம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதானி குடும்பத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் பங்கு மதிப்புகளை உயர்த்தி காட்டி அதானி நிறுவனங்கள் அதிக அளவில் கடன் பெற்று பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை அடுத்து அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் சரிவை கண்டன. அதானியின் சொத்து மதிப்பு கூட சரிவடைந்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் செபி விசாரணை நடத்தினால் போதும் என கூறியது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய நிம்மதியை தந்தது.
இதனிடையே அதானி குழும பங்குகள் சரிவிலிருந்து மீண்டு வர தொடங்கின. கிட்டத்தட்ட ஆறு பங்குகள் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பிருந்த அளவுக்கு மீண்டு வந்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய இழப்புகளை மீறி லாபத்தில் வர்த்தகமாகின்றன. இதனால் அதானி குழும பங்குகளின் மதிப்பு சந்தை மதிப்பு 200 மில்லியன் டாலர்களை கடந்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த அதானி பவர் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு தற்போது 2.72 லட்சம் கோடிகளாக உள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.6 லட்சம் கோடிகளாக இருந்த நிலையில் தற்போது 3 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது.அம்புஜா சிமெண்ட்ஸின் சந்தை மூலதன மதிப்பு ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பு 99,000 கோடிகளாக இருந்தது தற்போது அது 1.56 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது.
ஏசிசி நிறுவனத்தின் பங்கு 43,000 கோடியிலிருந்து 48,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3.91 லட்சம் கோடிகளாக இருந்து தற்போது 3.94 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது.அதானி கிரீன் எனர்ஜியின் சந்தை மூலதனமும் 3.05 லட்சம் கோடியாக இருந்து தற்போது 3.06 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 40%, அதானி பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 35 % வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இருப்பினும் அதானி குடும்பத்தின் ndtv நிறுவனத்தின் பங்கு 5.5% சரிவடைந்துள்ளது. அதே வேளையில் அம்புஜா சிமென்ஸ் மற்றும் அதானி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் முறையே 25 % மற்றும் 20% என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
விரைவில் அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டில் சேர்க்கப்படலாம் என தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனை அடுத்து அதானி என்டர்பிரைசஸின் பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்செக்ஸ் இன்டெக்ஸில் சேர்க்கப்பட்டால் இந்த பங்கு மதிப்பு 30% வரை உயரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications