இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழுமங்களில் ஒன்று அதானி குழுமம். இந்த குழுமத்தினை சேர்ந்த சில பங்குகள் கடந்த சில காலாண்டுகளாகவே நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி பவர் பங்கு விலை, கடந்த ஒரு வருடத்தில் 188 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
இதற்கிடையில் இன்று வர்த்தக அமர்வில் இப்பங்கின் விலையானது 5% அதிகரித்து அப்பர் சர்கியூட் ஆகியது. எனினும் முடிவில் அப்பர் சர்கியூட்டில் இருந்து விலகி 4.43% ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 4.43% அதிகரித்து, 278.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 279.65 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 253.05 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 312 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 70.35 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 4.40% அதிகரித்து, 277.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 279.50 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 252.90 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 312 .30 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 69.95 ரூபாயாகும்.
லாபம்
இந்த நிறுவனம் மார்ச் 2022ம் காலாண்டில் வரி, வட்டிக்கு பின்பு, 4,645 கோடி ரூபாயாக பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் லாபம் முந்தைய ஆண்டில் 13 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் வருவாய் விகிதம் 93 சதவீதம் அதிகரித்து 13,308 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 6902 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தகக்து.
ஓராண்டு நிலவரம்
அதானி பவர் நிறுவனம் கடந்த ஆண்டில் அதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தினை கொடுத்துள்ளது. இது கடந்த ஆண்டில் 97 ரூபாயில் இருந்து 279.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 188 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இப்பங்கின் விலையானது 500 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 4 ஆண்டுகளில் 1000% ஏற்றத்தினையும் கண்டுள்ளது.
தேவை அதிகம்
சமீபத்தில் அதானி பவர் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை எட்டிய ஆறாவது அதானி குழும நிறுவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மின்சார தேவையானது அதிகரித்துள்ள இந்த நேரத்தில், அதானி பவர் நிறுவனத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இதுவும் இப்பங்கின் உயர்வுக்கு ஒரு காரணம் எனலாம்.


Click it and Unblock the Notifications