அதானியின் லாபத்தில் உங்களுக்கும் பங்கு வேண்டுமா? 6 மாசத்துல 54% வளர்ச்சி..!!

இந்தியாவில் வேகமாக வளரும் தொழில் குழுமமாக அதானி குழுமம் திகழ்கிறது. அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி பவர் 6 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு 54% லாபத்தை தந்துள்ளது.

அதானி பவர் பங்கின் தற்போதைய சந்தை விலை 214 ரூபாயாக உள்ளது. மார்ச் மாதத்தில் அதானி பவர் ஒரு பங்கின் விலை 138 ரூபாயாக தான் இருந்தது. அந்த வகையில் இந்த பங்கில் மார்ச் மாதம் ஒருவர் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 1.55 லட்சமாக வளர்ந்திருக்கும். அதாவது 6 மாதத்திலேயே 50,000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்திருக்கும்.

அதானியின் லாபத்தில் உங்களுக்கும் பங்கு வேண்டுமா? 6 மாசத்துல 54% வளர்ச்சி..!!

தற்போது இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு தோராயமாக 4.12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சந்தை நிபுணர்கள் தற்போதும் கூட இந்த பங்கினை வாங்கலாம் என்கின்றனர். முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் மொத்த பங்குகளையும் வாங்குவதை தவிர்த்து, சந்தை இறங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கும் Buy on Dips உத்தியை பின்பற்றலாம் என்கின்றனர்.

இந்த பங்கிற்கு 183 ரூபாய் என்பது சப்போர்ட் லெவலாக இருகும் என சொல்லப்படுகிறது. ஏனெனில், இந்த விலையானது 50 வார நகரும் சராசரியோடு ஒத்துப்போகிறது எனவே குறுகிய காலத்தில் இது 230 ரூபாய் என்ற அளவை எட்டும் என சாய்ஸ் புரோக்கிங் நிறுவன ஆய்வாளர் சச்சின் குப்தா கூறுகிறார். இந்த பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 254 ரூபாயாகும்.

Also Read

இந்நிறுவனத்தில் 74% பங்குகள் பிரமோட்டர்களிடமே உள்ளது, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 11% பங்குகளை வாங்கி வைத்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக இது திகழ்வது உறுதியாகிறது. ஜூன் உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் 20% வருவாய் உயர்வையும் 13% லாப உயர்வையும் பதிவு செய்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் சுமார் 973% வளர்ச்சி அடைந்து மல்டிபேக்கர் பங்காக உள்ளது.

Recommended For You

அதானி குழும பங்குகள் அனைத்துமே நல்ல வளர்ச்சியில் இருந்தாலும் குழுமம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியும் பங்கு மதிப்பை பாதிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் சற்றே கவனத்துடன் இருக்க வேண்டும். அதானி பவர் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமாகும்.

குஜராத், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி ஆலைகளை நடத்தி 18,150 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் மின்சாரம் விற்பனை செய்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+