கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவிலான எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள். பலரும் தங்களுடைய போர்ட்போலியோ சிவப்பு நிறமாக தான் காட்சி தருகிறது என புலம்பு வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் ஈரானில் போர் ஏற்பட்டது. போர் தொடங்கி தற்போது வரை இந்திய பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் சரிவிலேயே இருந்து வருகிறது. இதனால் ஏராளமான நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிவில் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் மைனஸாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் அதானி குழுமத்திற்கு சொந்தமான ஒரு பங்கு மட்டும் இந்த பங்குச்சந்தை சரிவிலும் நல்ல லாபம் ஈட்டிய பங்காக மாறியிருக்கிறது.

அதானி குமுமத்திற்கு சொந்தமான நிறுவனம் தான் அதானி பவர். மின்சாரம் தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று , இன்று என இந்த இரண்டு நாட்களில் மட்டும் 7.5% உயர்வு கண்டிருக்கிறது. இதன் ஒரு பங்கு மதிப்பு 157.50 ரூபாய் என்ற அளவுக்கு உயர்வு கண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான மின் பகிர்மான கழகத்திற்கும் அதானி பவர் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்டிருக்க கூடிய ஒப்பந்தம் தான் இதற்கு காரணம். மகாராஷ்டிரா மாநில மின் பகிர்மான கழகத்திற்கு 1600 மெகா வாட் மின்சாரம் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது அதானி குழுமம். 25 ஆண்டுகால பவர் சப்ளை அக்ரீமெண்ட் என்ற பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. வரும் 2021 ஆம் நிதி ஆண்டிலிருந்து அதானி பவர் நிறுவனம் இந்த மின்விநியோகத்தை தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவலை அதானி பவர் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்ததை அடுத்து அதன் பங்கு மதிப்பு இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இனிவரும் நாட்களில் மின்சார தேவை அதிகரிக்கும் என்பதாலும் ,கோடைகாலம் தொடங்கி இருப்பதால் மின் தேவை அதிகரித்து இந்த நிறுவனத்தின் மின் விநியோகம் அதிகரிக்கும் என்பதாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற பங்காக மாறியுள்ளது.
அதானி பவர் நிறுவனத்தின் பங்கு கடந்த ஆறு மாதத்தில் 23 சதவீதமும் கடந்த ஓராண்டு காலத்தில் 52% உயர்ந்திருக்கிறது 5 ஆண்டுகளில் 789% லாபமும் ஈட்டி மல்டிபேக்கர் பங்காக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதன் ஒரு பங்கு மதிப்பு 182 ரூபாய் என தன்னுடைய வரலாற்று உச்சபட்ச மதிப்பு எட்டியது. தற்போது அதிலிருந்து 14 சதவீதம் குறைவில்தான் இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications