அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன. ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை என்பது குறைந்து விட்டதாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரையிலும் கூட அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
தொடர்ந்து அதானி குழும பங்குகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அதானி குழுமத்தின் 10 பங்குகளும், கடந்த வியாழக்கிழமை இருந்த விலைக்கு மேலாக காணப்படுகின்றன.

குறிப்பாக மூன்று அதானி குழும பங்குகள் அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன. இதில் அதனி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன்அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன. மீதமுள்ள 7 நிறுவனங்களும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.
இதில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது 2.50% மேலாகவும், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் நிறுவன பங்குகள் முறையே 2.50% மற்றும் 1.50% ஏற்றத்திலும் முறையே காணப்படுகின்றன.
அதானி கிரீன் எனர்ஜி: அதானி கிரீன் எனர்ஜி நிருவனம் இன்று காலை தொடக்கத்தில் சில நிமிடங்களிலேயே அப்பர் சர்க்யூட் ஆகி தொடங்கியது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது தொடர்ந்து கடந்த 2 தினங்களாகவே 815.60 ரூபாயில் இருந்து 899.15 ரூபாயாக தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகின்றது. கடந்த இரு அமர்வுகளில் மட்டும் இப்பங்கானது 10% ஏற்றம் கண்டுள்ளது.

அதானி டோட்டல் கேஸ்; அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது இன்றும் ஏற்றத்திலேயே கானப்ப்ட்டது. தொடக்கத்திலேயே 5% அப்பர் சர்க்யூட் ஆன இந்த பங்கு, தொடர்ந்து இரு தினங்களாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த இரு அமர்வுகளில் மட்டும் இப்பங்கானது 822 ரூபாயில் இருந்து, 906 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்: அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி டிரான்ஸ்மிஷன் பங்கானது, இன்று அப்பர் சர்க்யூட் ஆகி ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த இரு அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வரும் இப்பங்கு, கடந்த இரு அமர்வுகளில் 10% ஏற்றத்தில் காணப்படுகின்றது.
அதானி பவர்: அதானி குழுமத்தின் மற்றொரு பங்கான அதானி பவரும் இன்று உச்சத்தினை எட்டியுள்ளது. இது புதிய உச்சமாக 197.70 ரூபாயாகவும் எட்டியுள்ளது. இன்று இன்ட்ராடே வணிகத்தில் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகிறது. இப்பங்கும் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது.

அதானி எண்டர்பிரைசஸ்: அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று சுமார் 1795 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இப்பங்கானது கடந்த வியாழக்கிழமையன்று முடிவு விலையில் இருந்து, 2.50% மேலாக காணப்படுகின்றது. வியாழக்கிழமையன்று 1754 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த இரு அமர்வுகளில் மட்டும் இப்பங்கின் விலையானது 1968 ரூபாயில் இருந்து, 1795 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 6% ஏற்றம் கண்டுள்ளது.
மேற்கண்ட 5 பங்குகள் தவிர அதானி குழுமத்தின் மற்ற பங்குகளான ஏசிசி 1.70% ஏற்றத்திலும், அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது 1.75% ஏற்றத்திலும், அதானி வில்மர் பங்கானது 0.50% ஏற்றத்திலும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விலையானது 0.50% ஏற்றத்திலும், எண்டிடிவி பங்கு விலையானது 1.50% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications