இந்தியாவில் மிகப்பெரிய தனியார் குழுமங்களில் ஒன்றான அதானி குழும பங்குகள் கடந்த திங்கட்கிழமை அன்று பங்குச் சந்தையில் பெரும் உயர்வை கண்டன. அமெரிக்க அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு மற்றும் குற்றவியல் விசாரணைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பின்னணியில், முதலீட்டாளர்களிடையே அதானி குழுமத்துக்கான நம்பிக்கை மீண்டும் உருவானதை தொடர்ந்து, இந்த உயர்வு ஏற்பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இன்றைய வர்த்தகத்தில் ஏறிய வேகத்தில் பங்குகள் அனைத்தும் சரிந்தது.
கௌதம் அதானி சமீபத்தில் அமெரிக்க நிர்வாக அதிகாரிகளை நேரில் சந்தித்து, தன்னையும் அதானி குழும அதிகாரிகளையும் குற்றவியல் விசாரணைகளில் இருந்து விடுவிக்கக் கோரி(Request) வருவதாகக் கூறப்படுகிறது. அவருடன் அவரது மருமகன் மற்றும் குழுமத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு, அதானி குழுமத்தின் மீது சென்ற வருடம் நவம்பரில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதில், அதானி குழும அதிகாரிகள் சூரிய சக்தி திட்ட ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசுத் தொண்டு நிர்வாகிகளுக்கு லஞ்சம் வழங்க முயன்றதாக அமெரிக்காவின் "ஜாஸ்டிஸ் டிபார்ட்மென்ட்" தெரிவித்தது.
இந்த சந்திப்பின் செய்தி வெளியான உடனே, முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளுக்குள் மீண்டும் நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கினர். இதன் விளைவாக, அதானி குழும பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் வேகத்தில் உயர்ந்தன.
அதானி குழுமத்தில் உள்ள முக்கியமான பங்குகள் திங்கட்கிழமையன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தன. அதில், அதானி டோட்டல் கேஸ் பங்கு 11% என அதிகளவில் உயர்ந்தது. அதன்பின்னர், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 7% உயர்வை கண்டது. அதேபோல், அதானி கிரீன் எனர்ஜி பங்கு 6.6% உயர்வடைந்தது. அதானி போர்ட்ஸ் பங்கு 6.3% மற்றும் அதானி பவர் பங்கு 5.9% என நிலையான உயர்வை பெற்றன. இந்த பங்குகளின் கூட்டு உயர்வு, முதலீட்டாளர்களிடையே அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தின.
ஆனால், முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து கடுமையாக உயர்ந்த அதானி குழுமப் பங்குகள், ஆரம்பகால லாபங்களை தொடர்ந்து இன்றைய வர்த்தகம் முடியும் நேரத்தில், சென்செக்ஸில் 11%க்கும் மேல் உயர்ந்த அதானி டோட்டல் கேஸ் 4% சரிந்து ரூ.632.30 ஆக முடிந்தது. கிட்டத்தட்ட 7% உயர்ந்த பிறகு அதானி எண்டர்பிரைசஸ் 4% அதிகமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் அதானி கிரீன் எனர்ஜி 6.6% ஏற்றத்திற்குப் பிறகு 4.40% சரிந்து 922.90 ஆக உள்ளது. முறையே 6.29% மற்றும் 5.96% உயர்ந்த அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் , இப்போது 2.10% மற்றும் 3.67% சரிந்துள்ளன. ஆரம்பகால ஏற்றம் முழுவதுமாக சரிந்தது.
இந்த உயர்வு, கடந்த சில வாரங்களாக குறைந்த நிலையில் இருந்த அதானி பங்குகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது. குறிப்பாக, கடந்த வருடத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட பங்கு வீழ்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்திருந்தது. தற்போது அமெரிக்க விசாரணைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், அதனுடன் கூடிய நிர்வாக நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களை ஒட்டி, பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், முதலீட்டாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. எதிர்காலத்தில் இந்த விசாரணைகள் எந்த திசையில் செல்லும் என்பது அதானி குழுமத்தின் பங்கு நிலவரத்தில் தொடர்ந்தும் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.
இதற்கிடையில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஜனவரி முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 78% உயர்ந்து ரூ.647 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 35% அதிகரித்து ரூ.6,375 கோடியாகப் பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 24% உயர்ந்து ரூ.5,412 கோடியாக இருந்தாலும், லாபம் கணிசமாக உயர்ந்துள்ளது.
தொடர்ச்சியான காலாண்டு அடிப்படையில் பார்க்கும்போது, நிகர லாபம் முந்தைய டிசம்பர் காலாண்டில் ரூ.562 கோடியாக இருந்தது. தற்போது 15% உயர்ந்துள்ளது. வருவாயும் முந்தைய காலாண்டை விட 9% அதிகரித்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.974 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.552 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிவு வாரியாக ஆராய்ந்தால், மார்ச் காலாண்டில் பரிமாற்ற வணிகத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 36% அதிகரித்து ரூ.2,247 கோடியாகவும், விநியோக வணிகத்தின் வருவாய் ரூ.2,907 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications