BSE -யிலேயே மோசமான பெர்பார்மன்ஸ்.. லிஸ்டில் எந்த நிறுவனம் எல்லாம் இருக்கு தெரியுமா?

அதானி குழும பங்குகள் இன்றும் கூட பலத்த சரிவினையே கண்டு வருகின்றன. குறிப்பாக அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பங்குகள் ஜனவரி 24ல் இருந்து பார்க்கும்போது டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு தொடர் சரிவினைக் கண்டு வரும் அதானி குழும பங்குகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஹீண்டர்ன்பர்க் அறிக்கையால் சரிவு

ஹீண்டர்ன்பர்க் அறிக்கையால் சரிவு

கடந்த சில ஆண்டுகளாகவே அதானி குழும பங்குகள் தொடர்ந்து பலத்த ஏற்றத்தினை கண்டு வந்தன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சிறந்த மல்டிபேக்கர் பங்குகளாக இருந்தன. ஆனால் அதானி குழுமத்தின் மீதான மோசடியான குற்றச்சாட்டுகள் என்பது வந்ததில் இருந்து, அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டுள்ளன.

 அதானி டோட்டல் கேஸ்

அதானி டோட்டல் கேஸ்

அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலையானது கடந்த 21 அமர்வில் கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. இது கடந்த ஜனவரி 24, 2023 அன்று 3885.45 ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரி 22ல் 834.95 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

அதானி கிரீன் எனர்ஜி & அதானி டிரான்ஸ்மிஷன்

அதானி கிரீன் எனர்ஜி & அதானி டிரான்ஸ்மிஷன்

அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பங்குகள் முறையே 71.8% மற்றும் 71.4% எனும் சரிவில் காணப்படுகின்றது. இதே காலகட்டத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1233.77 புள்ளிகள் குறைந்து, 59,744.98 புள்ளிகளாக இருந்தது.

அதானி குழுமம் மீதான நம்பிக்கை

அதானி குழுமம் மீதான நம்பிக்கை

தொடர்ந்து அதானி குழுமம் மீதான நம்பிக்கை சரிந்து வரும் நிலையில் அழுத்தத்தில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு விலை குறையலாம் என்றே முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பண்டமெண்டல் ரீதியாக இப்பங்குகள் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற பங்குகள் எவ்வளவு சரிவு?

மற்ற பங்குகள் எவ்வளவு சரிவு?

எனினும் அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் விலையானது, முறையே 23.30% மற்றும் 28.30% மற்றும் 29.20% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

அதானி குழுமம் தவிர, பி எஸ் இ-யில் உள்ள நஷ்டமடைந்த பட்டியலில் யுரேகா இண்டஸ்ட்ரீஸ் சர்வோட்டம்பின்வெஸ்ட், பிசி ஜீவல்லர், அட்கான் கேபிடல் சர்வீசஸ், அபூர்வா லீசிங் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், மெகா நிர்மான் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் வெஸ்ட் லீஷர் ரிசார்ட்ஸ் ஆகிய பங்குகள் 58% - 64% வரையில் சரிவினைக் கண்டுள்ளன.

ஏசிசி, என்.டி.டி.வி & அதானி பவர்

ஏசிசி, என்.டி.டி.வி & அதானி பவர்

ஏசிசி, என்.டி.டி.வி மற்றும் அதானி பவர் உள்ளிட்ட பங்குகள் 24.9% மற்றும் 28.90% மற்றும் 40.80% ஜனவரி 24ல் இருந்து சரிவினைக் கண்டுள்ளன. நிபுணர்கள் அதானி குழுமம் சம்பந்தமான பல செய்திகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது. இது நிறுவனத்திற்கு நல்ல செய்தி அல்ல, ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளில் இருந்து தற்காலிகமாக விலகியே இருப்பது நல்லது.

 நீண்டகால நோக்கில் வாங்கலாம்

நீண்டகால நோக்கில் வாங்கலாம்

எனினும் அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள் நல்ல பேலன்ஸ் ஷீட்டினையும், நல்ல வணிக நடவடிக்கையும் வைத்துள்ளது. ஆக இப்பங்குகளும் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ள நிலையில், நீண்டகால நோக்கில் வாங்க ஏற்ற பங்குகளாகவும் பார்க்கப்படுகின்றன.

ஏற்றம் கண்ட பங்குகள்

ஏற்றம் கண்ட பங்குகள்

 

அதானி குழுமத்தினைச் சேர்ந்த 10 பட்டியலிடப்பட்ட பங்குகளில், 11.62 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 7.58 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளன. இது ஜனவரி 24 வாக்கில் 19.20 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
அதேசமயம் அவீர் புட்ஸ், சோமா டெக்ஸ்டைல்ஸ் & இண்டஸ்ட்ரீஸ், நெட்லின்க்ஸ், பாராகான் நிதி, டெய்லர்மேட் ரீனிவபிள், டைட்டன் இன்டெக், சாப்ட்ராக் வென்ச்சர், இண்டகிரேடட் டெக்னாலஜீஸ், ஜாவேரி கிரெடிட்ஸ் & கேபிடல், கிளாசிக் ஃபிலமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஜனவரி 24ல் இருந்து, 75 - 150% ஏற்றத்தினை கண்டுள்ளன.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+