அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்கு விலை திங்களன்று மும்பை பங்குச்சந்தையில் இன்ட்ராடே வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக 8 சதவீதம் வரை சரிந்து ரூ.514 விலையை எட்டியது. இது இரண்டாவது நாளாக இழப்பை பதிவு செய்துள்ளது. கடந்த வாரத்தில் இந்நிறுவன பங்கு 641 ரூபாய் வரையில் உயர்ந்திருந்தது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இதன் விலை உயர்ந்தது மூலம் அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் கடந்த மூன்று வர்த்தக நாட்களில் சுமார் 30 சதவீதம் உயர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் லாபம் எடுக்க முடிவு செய்து தற்போது பங்குகளை விற்பதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை முழுமையாக இந்தியாவில் சரியாகாத நிலையில் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை குறைய என்ன காரணம்..? கடந்த வார இறுதியில் அதானி டோட்டல் கேஸ், சில தொழிற்துறை வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான இயற்கை எரிவாயுவை குறைந்த விலைக்கு விற்பனை செய்தது.
கடந்த வார துவக்கத்தில் ரூ.119.90 விற்பனை செய்யப்பட்ட எரிவாயு வார இறுதியில் அளவுக்கு அதிகமான இருந்த எரிவாயுவை ரூ.82.95-க்கு குறைத்து விற்பனை செய்தது. இந்த புதிய விலை மார்ச் 16 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த குறைப்பு அப்ஸ்ட்ரீம் எரிவாயு விலை குறைந்தால் ஏற்பட்டது. மத்திய கிழக்கு மோதல் காரணமாக விநியோக தடைகள் தொடர்ந்தாலும், சில எரிவாயு விநியோகங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் அதானி டோட்டல் கேஸ் பங்கு 30 சதவீதம் உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்தது மத்திய அரசின் இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) உத்தரவு 2026 மூலம் ஏற்பட்டது. மார்ச் 9 அன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவில், எரிவாயு நிறுவனங்கள் தங்களுடைய இருப்பை அத்தியாவசிய துறைகளுக்கு கொடுக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவித்தது. இதனால் வர்த்தக துறைக்கு செல்ல வேண்டி எல்பிஜி மொத்தமாக நிறுத்தப்பட்டு எரிவாயு விலை உயர்ந்தது மூலம் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை உயர்ந்தது.
மத்திய கிழக்கு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழி எல்என்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை அச்சம் எழுந்தது. இந்த சூழலில் அதானி டோட்டல் கேஸ் பங்கு வேகமாக உயர்ந்தது. முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க விற்க துவங்கியுள்ளதால் இப்போது சரிவு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications