அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்கு விலை 2 நாளில் பெரும் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு இருக்கும் வேளையில் எரிவாயு துறை சார்ந்த பங்குகள் அனைத்தும் முதலீட்டாளர்களின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 470 ரூபாயில் இருந்து அதிகப்படியாக 650 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ-யில் இன்ட்ராடே உச்சமாக ரூ.650-ஐ எட்டியது. இது 14.2 சதவீத உயர்வாகும். இரண்டு நாட்களில் 39 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஆனால் இன்றைய வர்த்தக முடிவில் 609.50 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.

மார்ச் 9-ஆம் தேதி அரசு இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) உத்தரவு 2026-ஐ வெளியிட்டது. இதில் இந்தியாவில் அனைத்து நிறுவனங்களும் எரிவாயுவை மக்களின் அத்தியாவசிய துறைகளுக்கு மட்டுமே சப்ளை செய்ய முன்னுரிமை அளிக்கும் வகையில் இயங்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு வரும் எல்என்ஜி ஏற்றுமதி போர் காரணமாக தடைபட்டுள்ளது. இதனால் இருப்பில் இருக்கும் எரிவாயு மற்றும் பிற வழித்தடத்தில் இருந்து வரும் எரிவாயு ஆகியவற்றை பெரும் கட்டுப்பாடுகள் உடன் சப்ளை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு உத்தரவின்படி, வீட்டு குழாய் எரிவாயு மற்றும் போக்குவரத்துக்கான சிஎன்ஜி ஆகியவற்றுக்கு 100 சதவீத ஒதுக்கீடு தொடரும். கடந்த ஆறு மாத சராசரி நுகர்வின் அடிப்படையில் இது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது வீட்டு மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் எல்பிஜி விலை உயர்ந்துள்ளது, கடந்த ஒரு மாதத்தில் வீட்டு சிலிண்டர் 60 ரூபாயும், வர்த்தக சிலிண்டர் 114.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் கத்தார் எல்என்ஜி உற்பத்தி நிறுத்தம் காரணமாக இயற்கை எரிவாயு விலை கடந்த வாரம் 40 சதவீதம் உயர்ந்தது.
சமையல் எரிவாயு நெருக்கடி காரணமாக, எலக்ட்ரிக் அடுப்புகளுக்கான தேவை மக்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. க்விக் காமர்ஸ் தளங்களான பிளிங்கிட், செப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் போன்றவற்றில் இண்டக்ஷன் அடுப்புகள் Sold out ஆகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஹோட்டலில் உணவு கட்டணத்தை தாண்டி ஜிஎஸ்டி, சேவை வரி வசூலிப்பது போல் தற்போது தற்போது கேஸ் தட்டுப்பாடு காரணமாக, கேஸ்க்கு தனி கட்டணத்தை ஓட்டல்கள் வசூலிக்க தொடங்கியுள்ளன.
சென்னையில் பெருங்குடியில் உள்ள ஹோட்டல் ஒன்று, கேஸ் கட்டணம் என ரூ.9.52-ஐ கட்டணமாக வசூலித்திருக்கிறது. மொத்தமாக 2 இட்லி, ஒரு மெதுவடைக்கு ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது அடுத்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது.


Click it and Unblock the Notifications