அதானி குடும்பத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் பங்கு தன்னுடைய 52 வார கால உச்ச மதிப்பில் இருந்து 21% சரிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பங்கினை வாங்கலாமா என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதானி குழுத்திற்கு சொந்தமான அதானி வில்மர் நிறுவனம் சமையல் எண்ணெய் மற்றும் உணவு மற்றும் எஃப்எம்சிஜி பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது தன்னுடைய 52 வார கால உச்ச மதிப்பிலிருந்து 21% சரிவில் இருக்கிறது.

ஜூலை 8ஆம் தேதி பங்குச்சந்தையில் அதானி வில்மர் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 347 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 422 ரூபாய் ஆகும்.
அதானி வில்மர் நிறுவனத்தை பொருத்தவரை இதன் நிதிநிலைமைகளை ஆய்வு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் 59,148 கோடி ரூபாய் வருமான மீட்டிய இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் சற்றே நஷ்டம் அடைந்து 51,555 கோடி மட்டுமே வருமானமாக ஈட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் லாபமும் 2023 ஆம் ஆண்டில் 554 கோடி ரூபாயாக இருந்து தற்போது 171 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதனிடையே ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டையொட்டி அதானி வில்மர் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் , தங்களது நிறுவனத்தின் சமையல் எண்ணெய் பிரிவு கடந்த ஓராண்டு காலத்தில் 10% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உணவு மற்றும் எஃப்எம்சிஜி பிரிவானது 45 % என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
அதானி வில்மர் நிறுவனத்தின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டுக்கான முடிவுகள் வெளியானதை அடுத்து நுவாமா என்ற பங்குச்சந்தை தரகு நிறுவனம் அதானி வில்மர் நிறுவனத்தின் வருமானம் 12.5% அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக சமையல் எண்ணெய் பிரிவானது ஓராண்டு இடைவெளியில் 10% என்ற வளர்ச்சியையும் உணவு மற்றும் எஃப்எம்சிஜி பிரிவானது மிக வலுவான வளர்ச்சியையும் அடையும் என நுவாமா நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதானி வில்மர் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது. குறிப்பாக இதன் ஃபார்ச்சூன் மற்றும் கோஹினூர் பிராண்டுகள் நல்ல வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது. இந்த நிறுவன பங்கின் மதிப்பு 455 ரூபாய் என்ற அளவில் வளர்ச்சி அடையலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே அதானி வில்மர் நிறுவனம் தங்களின் பொருட்கள் ஈ காமர்ஸ் தளங்களில் நல்ல விற்பனை ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications