அதானி குழுமம் தனது எப்எம்சிஜி பிரிவு நிறுவனமான அதானி வில்மார்-ல் உள்ள பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் அதானி வில்மார் பங்குகள் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் இருந்து பெரும் சரிவை சந்தித்து வர்த்தகம் முடியும் போதும் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை தேடித்தந்தது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் அதானி வில்மார் பங்குகள் 291.60 ரூபாய்க்கும், தேசிய பங்குச்சந்தையில் 10 சதவீதம் சரிந்து 291.10 ரூபாயாக்கு இன்றைய வர்த்தகம் முடிந்துள்ளது.

அதானி குழுமம் தொடர்ந்து நிறுவனங்களை வாங்கி வருவதை தான் கடந்த 10 வருடமாக பார்த்து வருகிறோம். ஆனால் முதல் முறையாக அதானி குழுமம் இந்திய நுகர்வோர் சந்தையை விட்டு விலகும் முடிவை எடுத்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அதானி குழுமம் முக்கிய கட்டமைப்புத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், முக்கியமற்ற துறைகளில் இருந்து வெளியேறும் முடிவின் ஒரு பகுதியாக அதானி வில்மார் நிறுவனத்தை கைகழுவுகிறது. சரி இன்றைய சரிவுக்கு என்ன காரணம்..?
அதானி குழுமம் ஒப்பன் மார்கெட் சந்தையில் அதானி வில்மாரில் உள்ள தனது 20 சதவீத பங்குகளை வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் ரூ.7,148 கோடி வரை நிதி திரட்டுகிறது என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இன்று விற்பனையான நிலையில் வில்மார் பங்குகள் 10 சதவீதம் சரிந்துள்ளது.
அதானி குழுமம் நிறுவனம் ஜனவரி 10ஆம் தேதி சில்லரை அல்லாத முதலீட்டாளர்களுக்கு 17.54 கோடி பங்குகளை (அதாவது 13.50% பங்கு) விற்பனை செய்யும், அதைத் தொடர்ந்து ஜனவரி 13 அன்று சில்லரை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். இந்த விற்பனைக்கான குறைந்தபட்ச விலை பங்கு ஒன்றுக்கு ரூ.275 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் கூடுதலாக 8.44 கோடி பங்குகளை (6.50% பங்கு) விற்பனை செய்யும்.
இன்று அதானி குழுமம் வில்மார் பங்குகளை விற்பனை செய்த காரணத்தாலேயே வில்மார் பங்குகள் 10 சதவீதம் சரிந்துள்ளது. இது அதானி குழுமத்தின் அதானி வில்மாரில் இருந்து முழுமையாக வெளியேறும் முதல் கட்டமாகும். அடுத்த கட்டத்தில், அதானியின் கூட்டாணி நிறுவனமான சிங்கப்பூரின் வில்மார் இன்டர்நேஷனல் லிமிடெட், அதானி குழுமத்திடமிருந்து மீதமுள்ள பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ.305 என்ற முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பங்கு விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய், அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்டின் வளர்ச்சியைத் அதிகரிக்கவும், அதன் முக்கிய கட்டமைப்புத் துறைகளுக்கு பயன்படுத்த உள்ளது.
அதானி வில்மார் என்பது அதானி குழுமம் மற்றும் வில்மார் இன்டர்நேஷனல் இடையேயான 50-50 கூட்டு முதலீட்டு நிறுவனம் ஆகும். தற்போது, அதானி வில்மாரில் இரு நிறுவனங்களும் இணைந்து வைத்திருக்கும் பங்கு 87.87% ஆகும், இது செபியின் 75% என்ற விதிமுறையை மீறும் வகையில் அமைந்துள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் குறைந்தபட்சம் 25% ஐ பொது சந்தையில் இருக்க வேண்டும் என்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம் (செபி) விதிமுறைகள் அறிவுறுத்தியுள்ளதால், அதானி குழுமம் இந்த விற்பனை செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications