இன்றைய அமர்வில் இந்திய பங்கு சந்தையானது கடும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், பல பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதற்கிடையில் அதானி குழுமத்தின் அதானி வில்மர் பங்கு விலையானது, கடந்த 8 அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த பங்கு விலையானது இன்று 9.95% சரிவினைக் கண்டு, இதன் இன்ட்ராடே லோவான 497.55 ரூபாயினை எட்டியது. எனினும் முடிவில் 9.56% சரிவினைக் கண்டு, 499.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இது முந்தைய அமர்வில் 552.50 ரூபாயாக இருந்தது. இதன் முக்கிய சப்போர்ட் விலையாக நிபுணர்கள் 482 ரூபாயாக காணப்பட்டது.

அதானி வில்மர் சரிவு
அதானி வில்மர் பங்கானது 499.70 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இந்த பங்கானது டிசம்பர் 13 அன்று 652.20 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இது இதன் ஏப்ரல் மாத உச்ச விலையான 878.35 ரூபாயில் இருந்து, 43.11% சரிவினைக் கண்டுள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது221 ரூபாயாகும்.

இலக்கு விலை
இதே நிபுணர்கள் இப்பங்கின் விலையானது ஒவர் சோல்டு லெவலில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதன் அடுத்த முக்கிய சப்போர்ட் விலை 482 ரூபாயாகும். நீண்டகால முதலீட்டாளர்கள் கொஞ்சம் காத்திருக்கலாம். இதன் இலக்கு விலையானது 585 - 616 ரூபாயாகவும், இதே நீண்டகால நோக்கில் 779 ரூபாய்க்கு மேலாக ஏற்றம் காணும்போது, 950 - 1000 ரூபாயாகவும் இருக்கலாம்.

ஏன் சரிவு
இந்த நிறுவனத்தின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதன் மார்ஜின் விகிதமானது சரிவில் காணப்படுகின்றது. சமையல் எண்ணெய் விலையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவி வரும் நிலையில், அதானி வில்மரின் வருவாயும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இன்றைய அமர்வில் 5.55 லட்சம் பங்குகள் கைமாறின. பி எஸ் இ-யில் 28.82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் கைமாறின. இதற்கிடையில் இதன் சந்தை மதிப்பு 64,944.94 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications