இந்தியாவில் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக அதானி உள்ளது. இந்த குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கு வெளியீட்டினை செய்தது.
நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி வில்மர், ஆரம்பத்தில் 3.91% டிஸ்கவுண்ட் விலையில் பட்டியலிடப்பட்டது.
தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்ட இந்த பங்கின் விலையானது 221 ரூபாயாக இருந்தது. இது ஐபிஓ விலையானது 230 ரூபாயாகும்.
20% ஏற்றம்
அதானியின் 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டில், பங்கு விலையை 218 - 230 ரூபாயாக விலையை நிர்ணயம் செய்திருந்தது. தள்ளுபடி விலையில் பங்குகள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், புதிய முதலீட்டாளர்கள் இந்த பங்கினை வாங்க இது சரியான நேரமாக பார்த்தனர். உண்மையில் சரியான வாய்ப்பாக பார்க்கப்பட்ட நிலையில் தான் இரண்டாவது நாளாகவும் 20% அதிகரித்து காணப்படுகின்றது.
பிஎஸ்இ-யில் என்ன நிலவரம்
பிஎஸ்இ-ல் அதானி வில்மர் பங்கின் விலையானது 19.98% அதிகரித்து, 318.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 318.20 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 272.30 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 318 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 221 ரூபாயாகவும் உள்ளது.
என்எஸ்இ-யில் என்ன நிலவரம்
என்எஸ்இ-யில் அதானி வில்மர் பங்கின் விலையானது 20% அதிகரித்து, 321.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 321.90 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 272 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 321.90 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலையு 221 ரூபாயாகவும் உள்ளது.
சந்தை மதிப்பு என்ன?
இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 40,614 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தம் 26.31 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. மொத்தத்தில் கடந்த 2 அமர்வுகளில் 42.46% இந்த பங்கின் விலையானது அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதன் தேவையானது வலுவாக உள்ள நிலையில் இதன் விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். இதனை மெய்பிக்கும் விதமாக இந்த பங்கின் விலையானது அதிகரித்து வருகின்றது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications