பொதுவாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகளின் வணிகங்களில் ஈடுபடுகின்றன. ஒரு பெரிய நிறுவனம் ஒரு துறையில் களம் இறங்கும்போது, மற்றொரு பெரிய நிறுவனமும் அதே வணிகத்தில் களம் இறங்கும்போது பெரிய வணிக போட்டி ஏற்படுகிறது. இது சில சமயங்களில் அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே நீயா, நானா யார் பெரிய ஆள் என்ற தொழில்போட்டி ஏற்பட்டு விடுகிறது. தற்போது அதேபோல் ஒரு சூழல் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்துக்கும், குமார் மங்கல் பிர்லா தலைமையிலான ஆதித்யா பிர்லா குழுமத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதானி குழுமமும், ஆதித்யா பிர்லா குழுமமும் சிமெண்ட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. சிமெண்ட் வணிகத்தில் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் இந்த இரண்டு குழுமங்களும் போட்டி போட்டு சிறிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களை கையகப்படுத்தின.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட இருக்காது. தற்போது, பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாத நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் வயர்கள் மற்றும் கேபிள் பிரிவு வணிகத்தில் அதானி மற்றும் ஆதித்யா பிர்லா குழுமங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. வருவாயில் ஆண்டுக்கு இரட்டை இலக்கு வளர்ச்சி கொண்ட வயர் மற்றும் கேபிள் வணிகத்தில் நுழைவதாக அதானி மற்றும் பிர்லா குழுமங்கள் களம் இறங்க உள்ளதாக அறிவித்ததையடுத்து இந்த துறையில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது
கடந்த 19ம் தேதியன்று அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் வயர் மற்றும் கேபிள் வணிகத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது. இதனையடுத்து அதற்கு அடுத்தநாள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த துறையை சேர்ந்த பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்தது. உதாரணமாக வயர் மற்றும் கேபிள் துறையில் முன்னணி நிறுவனமான பாலிகேப் இந்தியா, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளின் விலை கடுமையாக சரிவு கண்டது.
ஹெவல்ஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் குறைந்தது. பினோலெக்ஸ் கேபிள் பங்கு விலை 4 சதவீதம் குறைந்தது. வயர் மற்றும் கேபிள் துறையில் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள என மொத்தம் 400 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
சர்வதேச தரகு நிறுவனமான ஜெஃப்பெரிஸின் ஆய்வாளர்கள் கூறுகையில், ரூ.80,000 கோடி மதிப்புள்ள இந்திய கேபிள் அண்ட் வயர் துறைக்கு கவர்ச்சிக்கரமான வாய்ப்பு உள்ளது. இந்த துறையில் ஒரு புதிய நிறுவனத்துக்கு போதுமான இடம் உள்ளது. ஏனெனில் இந்த துறை இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் 30 சதவீத தொழில் இன்னும் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications