பீகார்: பீகாரை தலைமையிடமாக கொண்டு வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 ,000 சதவீதம் வளர்ந்துள்ளது. ஆதித்யா விஷன் லிமிடெட் , பிரபல முதலீட்டாளர் ஆசிஷ் கச்சோலியா இதில் கணிசமான பங்குகளை கொண்டுள்ளார்.
இந்த நிறுவனத்தில் கச்சோலியா சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார். இதனிடையே ஆதித்யா டெலிவிஷன் நிறுவனத்தின் பங்குகள் பிரிக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.

இதன்படி 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கு 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட பத்து பங்காக பிரிக்கப்படுகிறது. அதாவது ஒரு பங்கினை வைத்திருப்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை தற்போது பத்தாக மாறி இருக்கிறது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு காலத்தில் ஆதித்யா விஷன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20 முதல் 25 சதவிகிதம் வரை வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது.

அது மட்டும் இன்றி இந்த நிறுவனம் பிற நகரங்களுக்கும் தங்களுடைய செயல்பாட்டை விரிவுபடுத்த இருக்கிறது. வடமாநிலங்களில் 500 கடைகளை திறப்பது என இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
எனவே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு வளர்ச்சி பாதையிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நுவாமா தரகு நிறுவனம் ஆதித்யா விஷன் லிமிடெட் நிறுவன பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு பல மடங்கு உயரும் என கூறியுள்ளது. தற்போதைய சூழலில் ஆதித்யா விஷன் நிறுவனம் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 100க்கும் அதிகமான கடைகளை வைத்து நடத்தி வருகிறது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 39 சதவீதமாக இருக்கிறது. ஜூன் உடன் முடிவடைந்த காலாண்டில் கச்சோலியா இந்த நிறுவனத்திலிருந்து சுமார் 2 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார்.
அதேபோல மார்ச் மாதத்தில் இந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 2.5 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு பிரிக்கப்பட்டு ஒரு பங்கின் மதிப்பு 504 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications