இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி திகழ்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த வங்கியின் பங்கு மதிப்பு சுமார் 70% உயர்ந்திருக்கிறது. அதாவது இந்தியாவின் மற்ற முன்னணி வங்கிகளோடு ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியின் பங்கு மதிப்பு உயர்வு பிரமிக்க வைக்கிறது.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் 727 ரூபாயாக இருந்த எஸ்பிஐ-இன் ஒரு பங்கின் மதிப்பு தற்போது 1213 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வங்கி பங்குகளில் அதிக அளவு லாபம் தந்த ஒரு பங்காக எஸ்பிஐ தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது. பல்வேறு தனியார் வங்கிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வங்கி துறையில் தான் தான் ராஜா என மீண்டும் ஒருமுறை sbi வங்கி நிரூபித்திருக்கிறத. வழக்கமாக பங்குகளின் மதிப்பை கணக்கிடுவதற்கு Price to Book Ratio என்பதை பயன்படுத்துவார்கள். அதாவது ஒரு வங்கி தன்னுடைய புக் வேல்யூ எனப்படும் புத்தக மதிப்பை மிஞ்சி எவ்வளவு விலையில் வர்த்தகமாகிறது என்பதுதான் இந்த ரேஷியோ.

இது அதிகமாக இருந்தால் அது மதிப்பீட்டு அதிக மதிப்பீட்டில் உள்ளது என பொருள். எஸ்பிஐ நிறுவனத்தின் இந்த ப்ரைஸ் டு புக் ரேஷியோ கடந்த ஆண்டு வெறும் 1.35% ஆக தான் இருந்தது ஆனால் இந்த ஆண்டு 2.41% என உயர்ந்திருக்கிறது. எச்டிஎஃப்சி ,ஐசிஐசிஐ , ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றுக்கு எல்லாம் இது மாறவே இல்லை. எஸ்பிஐயின் இந்த அபாரமான வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக எஸ்பிஐ வங்கி தன்னுடைய கடன் வளர்ச்சி பிரிவு மற்றும் வருவாய் வளர்ச்சி பிரிவுகளிலும் பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். பிரபல பங்குச்சந்தை நிபுணரான கிராந்தி பாத்தினி வங்கி பிரிவில் எஸ்பிஐ தான் ராஜா என நிரூபித்து இருக்கிறது என கூறியிருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகளே அதற்கு சாட்சி என்றும், தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு வளர்ச்சியில் தான் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். பொதுத்துறை வங்கியில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு பங்காக எஸ்பிஐ இருக்கும் என அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.
எஸ்பிஐ வங்கி பங்கு மதிப்பின் அடிப்படைகளை ஆய்வு செய்யும்போது சரியான அளவில் இருப்பதாக கூறும் மற்றொரு பங்கு சந்தை ஆய்வாளரான அபிநவ் திவாரி இந்த நிறுவனத்தின் கடன் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக இருக்கிறது, வேறு எந்த வங்கியிலும் இவ்வளவு இல்லை என கூறியிருக்கிறார்.
அண்மையில் தான் எஸ்பிஐ வங்கி இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்ஐ பின்னுக்குத் தள்ளி சந்தை மூலதன அடிப்படையில் நான்காவது பெரிய இந்திய நிறுவனமாக உருவெடுத்தது. பல்வேறு தரகு நிறுவனங்களும் எஸ்பிஐ பங்கினை தற்போது வாங்கலாம் என்ற மதிப்பீட்டை தந்திருக்கின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications