கடந்த மார்ச் 2020 -ல், சென்செக்ஸ் ஒரு வரலாறு காணாத சரிவைக் கண்டது. ஜனவரி 2020-ல், சுமாராக 42,200 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த சென்செக்ஸ், மார்ச் 2020 மூன்றாவது வார வாக்கில் 25,650 புள்ளிகள் வரை சரிந்தது.
அதன் பின் மெல்ல ஏற்றம் காணத் தொடங்கி 38,000 புள்ளிகள் வரை அசால்டாகத் தொட்டுவிட்டது. நேற்று மார்ச் 2020 சரிவுக்குப் பிறகு, அதிகபட்சமாக 38,799 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று அதையும் தாண்டி 44 புள்ளிகள் அதிகரித்து 38,843 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன?
சென்செக்ஸ் ஓப்பனிங் குளோசிங்
நேற்று மாலை, சென்செக்ஸ் 38,799 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,948 புள்ளிகளில், வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,008 புள்ளிகளைத் தொட்டது. 39,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் இன்று நிறைவடையுமா? என எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், பெரிய ஏமாற்றங்களைக் கொடுக்காமல், வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங்கை விட 44 புள்ளிகள் அதிகரித்து, 38,843 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,977 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,355 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,472 பங்குகள் விலை இறக்கத்திலும், 150 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 220 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை விவரங்கள்
டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ் பி ஐ, டெக் மஹிந்திரா, ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. கெயில், ஸ்ரீ சிமெண்ட்ஸ், சன் பார்மா, என் டி பி சி, ஹீரோ மோட்டோகார்ப் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஆசிய & ஐரோப்பிய சந்தைகள் நிலை என்ன
இன்று 25 ஆகஸ்ட் 2020 , லண்டனின் எஃப் டி எஸ் இ 0.14 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.82 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.71 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஹாங்காங்கின் ஹேங்செங், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா ஆசிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications