39,073-ல் நிறைவடைந்த சென்செக்ஸ்! தினம் தோறும் புதிய உச்சம் தொட்டு கலக்கும் சந்தை!

கடந்த 24 ஆகஸ்ட் அன்று 38,799 புள்ளிகளுக்கு நிறைவடைந்து, முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது சென்செக்ஸ், நேற்று (25 ஆகஸ்ட் 2020) 38,843 புள்ளிகளைத் தொட்டு பிரமாதப்படுத்தியது.

39,073-ல் நிறைவடைந்த சென்செக்ஸ்! தினம் தோறும் புதிய உச்சம் தொட்டு கலக்கும் சந்தை!

இன்று, ஒரே அடியாக 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து, முதலீட்டாளர்களைக் குதூகலப்படுத்தி இருக்கிறது சென்செக்ஸ்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டு நிறைவடைந்து இருப்பது, பங்குச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, உண்மையாகவே ஒரு இன்ப அதிர்ச்சி தான். சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன?

ஓப்பனிங் குளோசிங்

நேற்று மாலை, சென்செக்ஸ் 38,843 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,930 புள்ளிகளில், வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,111 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 39,073 புள்ளிகளில் நிறைவடைந்து எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்றைய குளோசிங்கை விட, இன்று 230 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 3,021 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,681 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,157 பங்குகள் விலை இறக்கத்திலும், 183 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 183 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

பங்கு விலை விவரங்கள்

டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ் இண்ட் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், ரிலையன்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், பிரிட்டானியா, ஏஷியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஆசிய & ஐரோப்பிய சந்தைகள் நிலை என்ன

இன்று 26 ஆகஸ்ட் 2020 , லண்டனின் எஃப் டி எஸ் இ 0.19 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.30 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.48 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா ஆசிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இண்டெக்ஸ்

இன்று (26 ஆகஸ்ட் 2020) எஃப் எம் சி ஜி, பார்மா தவிர மற்ற துறை சார் இண்டெக்ஸ்கள் எல்லாமே ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக மீடியா, தனியார் வங்கிகள், ஆட்டோமொபைல் போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி, சென்செக்ஸ் இண்டெக்ஸை ஏற்றம் காண வைத்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+