தட்டித் தூக்கிய சென்செக்ஸ்! 39,467-ல் நிறைவடைந்த சந்தை!

இந்த வாரம் உண்மையாகவே முதலீட்டாளர்களுக்கான அசுர ஏற்ற வாரமாக அமைந்துவிட்டது எனலாம்.

24 ஆகஸ்ட் 2020 அன்று சென்செக்ஸ் 38,799-ல் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.
25 ஆகஸ்ட் அன்று 38,843
26 ஆகஸ்ட் அன்று 39,073
27 ஆகஸ்ட் அன்று 39,113
28 ஆகஸ்ட் அன்று 39,467 புள்ளிகள் என தொடர்ந்து இந்த வாரம் முழுக்க புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.

இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் ஏற்றம் கண்டன? உலக பங்குச் சந்தைகள் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

ஓப்பனிங் குளோசிங்

ஓப்பனிங் குளோசிங்

நேற்று மாலை, சென்செக்ஸ் 39,113 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,264 புள்ளிகளில், வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,579 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 39,467 புள்ளிகளில் நிறைவடைந்து எல்லோரையும் திக்குமுக்காடச் செய்து இருக்கிறது. நேற்றைய குளோசிங்கை விட, இன்று 353 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 3,065 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,276 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,617 பங்குகள் விலை இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 159 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

பங்கு விலை விவரங்கள்

பங்கு விலை விவரங்கள்

சென்செக்ஸில் இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், சன் பார்மா, எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.பவர் கிரிட் கார்ப்பரேஷன், இன்ஃபோசிஸ், என் டி பி சி, ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஆசிய & ஐரோப்பிய சந்தைகள் நிலை என்ன

ஆசிய & ஐரோப்பிய சந்தைகள் நிலை என்ன

இன்று 28 ஆகஸ்ட் 2020 , லண்டனின் எஃப் டி எஸ் இ 0.1 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.07 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.26 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங்செங், தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா ஆசிய பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின.

இண்டெக்ஸ் நிலவரம்

இண்டெக்ஸ் நிலவரம்

இன்று வர்த்தக நேர முடிவில் பொதுத் துறை வங்கி இண்டெக்ஸ் 5.17 % மற்றும் தனியார் துறை வங்கி இண்டெக்ஸ் 4.7 % ஏற்றம் கண்டன. அதனைத் தொடர்ந்து நிதி சேவைகள் 2.17 சதவிகிதம் அதிகரித்து இருக்கின்றன. இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டதற்கு வங்கி & நிதி சேவைகள் மிக முக்கிய பங்காற்றி இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+