நேற்றைய குளோசிங் பெல் செய்தியிலேயே, சென்செக்ஸ் டெக்னிக்கலாகப் பார்த்தால், 41,150 லெவல்களில் இரண்டு டாப் உருவாகி இருப்பதைச் சொல்லி இருந்தோம். இந்த இரண்டு டாப்பையும் 41,150 என்கிற ரெசிஸ்டென்ஸை, சென்செக்ஸ் நேற்றே அசல்டாக உடைத்து, புதிய உச்சத்தை தொட்டு 41, 352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே 41, 950 வரை அசால்டாக முன்னேற வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி இருந்தோம்.
அதே போல இன்று சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தில் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ் 41,950 இலக்கை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது.

சந்தையில் இதே பாசிட்டிவ் செண்டிமெண்ட் நாளையும் தொடர்ந்தால்... 41,750 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 41,950 புள்ளிகளை இரண்டாவது ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை இறக்கம் காணத் தொடங்கினால் 41,000-த்தை முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
சென்செக்ஸ், ஃபண்டமெண்டல் செய்திகளான ஜிடிபி, சிபிஐ, ஐஐபி, டபிள்யூ பி ஐ, ஏற்றுமதி, வர்த்தகப் பற்றாக்குறை என எதையும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இப்படி ஃபண்டமெண்டல்களை கண்டு கொள்ளாமல் ஏற்றம் காணும் சந்தையை அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. எனவே மிகப் பெரிய முதலீட்டு முடிவுகளை இப்போதைக்கு எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,442 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,558 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது சென்செக்ஸின் புதிய வரலாற்று உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 206 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,197 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,221 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,703 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,184 பங்குகள் ஏற்றத்திலும், 1,317 பங்குகள் இறக்கத்திலும், 202 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,703 பங்குகளில் 53 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 116 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, சன் பார்மா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஐ டி சி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ், கெயில், க்ராசிம், எஸ்பிஐ, யெஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications