இன்றும் புதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..! ஏற்றம் தொடருமா..?

சந்தையில் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், இந்திய சந்தை இன்னும் பல உயரங்களை விரைவில் தொடும் என்கிற பாசிட்டிவ் சென்டிமென்ட் உடன் இருப்பதை உணர முடிவதாக நேற்றே சொல்லி இருந்தோம். அந்த சென்டிமென்ட் இன்றும் தன் வேலையைக் காட்டி இருக்கிறது.

மிக முக்கியமாக, சென்செக்ஸில் நல்ல வெயிட்டேஜ் இருக்கும் ரிலையன்ஸ், இன்று இந்திய கம்பெனிகள் தொடாத சந்தை மதிப்பு உச்சமான 10 லட்சம் கோடியைத் தொட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு, சமீபகாலமாக, தனிப்பட்ட பங்குகள் மற்றும் கம்பெனிகள் தொடர்பான செய்திகள் சந்தையை முன்னெடுத்துச் சென்று கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் புதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..! ஏற்றம் தொடருமா..?

முந்தைய குளோசிங் பெல் செய்திகளிலேயே, சந்தை தன் 41,250 புள்ளிகள் வரை ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருந்தோம். அந்த ஏற்றம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது போல. நேற்று 41,020 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைடடைந்தது. இன்று அதை விட 109 புள்ளிகள் அதிகரித்து 41,130 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சந்தை நாளையும் இந்த மொமெண்டத்தில், ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், ஏற்கனவே சொன்னது போல 41,250 புள்ளிகளைத் தொடலாம். எனவே இந்த புள்ளி, முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். இன்று சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவடைந்து இருப்பது போல, நாளையும் புதிய ஏற்றத்தில் நிறைவடையுமா..? எனப் பார்ப்போம்.

இன்றைய வர்த்தகம் நிறைவடைந்த பின், சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனைப் பார்த்தால் 41,000 ஒர் சுமாரான சப்போர்ட்டாகத் தான் தெரிகிறது. எனவே நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,900 லெவல்களை வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,020 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,161 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,130 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 109 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 12,132 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,151 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 50 புள்ளி ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,680 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,284 பங்குகள் ஏற்றத்திலும், 1,200 பங்குகள் இறக்கத்திலும், 196 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,680 பங்குகளில் 49 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 116 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

பார்தி இன்ஃப்ராடெல், யூபிஎல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹீரோமோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+