ஏஜிஐ இன்ஃபிரா (AGI Infra) என்ற நிறுவனம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் தங்கள் நிறுவன பங்கை 1:2 என்ற விகிதத்தில் பிரிக்க உள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஏஜிஐ இன்ஃபிரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.6 சதவீதம் உயர்ந்தது. தங்களுடைய பங்குகளின் லிக்விடிட்டியை அதிகரிப்பதற்கும் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கும் அளவிற்கு மாற்று நோக்கத்திலும் பங்கு பிரிப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருப்பதாக ஏஜிஐ இன்ஃபிரா அறிவித்துள்ளது .முதன்முறையாக இந்த நிறுவனம் பங்கு பிரிப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

டிசம்பர் 3ஆம் தேதி அன்று இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1,620 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2006 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கினை 5 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட இரண்டு பங்குகளாக பிரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான விளக்கத்தை ஏஜிஐ இன்ஃபிரா நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பங்கு பிரிப்பு தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் தங்கள் பங்கின் லிக்விடிட்டியை அதிகரிப்பதற்கும் சில்லறை முதலீட்டாளர்களும் எளிதில் வாங்கி வர்த்தகம் செய்யும் வகையிலும் தங்களுடைய பங்குகளின் ஃபேஸ் வேல்யூவை குறைத்து அவற்றை பிரிக்கின்றன. அந்த வகையில் இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு அது இரண்டு பங்காக மாறப்போகிறது.
இவ்வாறு பங்கு பிரிப்பு நடைபெறும் போது நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையும் பின்னர் அது படிப்படியாக அதிகரித்து விடும். இந்த நிறுவனத்தை பொருத்தவரை 2025 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 17.45 கோடி ரூபாயாக இருக்கிறது இது 20 சதவீதம் அதிகமாகும். அதேபோல இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மதிப்பு 75. 6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 9 சதவீதம் உயர்வு.
இந்த நிறுவனம் தற்போது பொது உள்கட்டமைப்பு திட்டங்களிலும் இறங்கி உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களை கட்டமைக்கும் ப்ராஜெக்டுகளையும் பெற்றுள்ளது. நிறுவன பங்கினை பொருத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் 2006 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 87 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications