மும்பை: தளவாடங்கள் துறையில் செயல்படும் ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் தான் ஆல் கார்கோ லாஜிஸ்டிக்.
இந்த நிறுவனம் 20% ஏற்றத்தில் அப்பர் சர்க்யூட் ஆகி முடிவடைந்துள்ளது. இது பிஎஸ்இ-யில் 130.8 ரூபாயாக முடிவடைந்துள்ளது. சரி ஏன் தீடிரென இந்த ஏற்றம் கண்டுள்ளது இந்த பங்கு விலை. வாருங்கள் அதனை பற்றித் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பங்கு வியாபாரத்தில் ஒரு வர்த்தக தினத்தில், வழக்கத்திற்கு மாறாக பங்குகளின் விலை எல்லை மீறிய அளவில் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதனை கட்டுப்படுத்துவதற்கு அப்பர் சர்க்யூட் ஒன்றை நிர்ணயத்திருக்கிறார்கள். பங்குகளின் விலை திடீரென அதிக அளவில் அதிகரிப்பதால் ஈட்டப்படும் மிதமிஞ்சிய லாபம் அல்லது விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் அதிக அளவிலான ஏற்றத்தினை கட்டுப்படுத்த அப்பர் சர்க்யூட் பயன்படுகிறது.
இந்த அப்பர் சர்க்யூட்டை சந்தை குறியீட்டு எண் அடைந்து விட்டால் பங்கு வர்த்தகம் தானாக நின்று விடும்படி, சர்க்யூட் பிரேக்கர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் முறையே 10 சதவீதம், 15 சதவீதம் மற்றும் 20 சதவீதம் என்று ஏறும்போது அல்லது இறங்கும்போது இது மூன்று நிலைகளில் செயல்படும்.
ஆல் கார்கோ லாஜிஸ்டிக் லிமிடெட் நிறுவனத்தின் புரமோட்டர் நிறுவனமான சாஷி கிரண் ஷெட்டி மற்றும் டேலண்டோஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தானாக முன்வந்து டிலிஸ்ட் செய்வதாக கூறியதை அடுத்து, கார்கோ நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளது.
இதன் புரமோட்டார்ஸ் நிறுவனம் 70% பங்குகளையும், வெளி நாட்டு நிறுவனங்கள் 13% பங்குகளையும், என்பிஎஃப்சி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் 3.64% பங்குகளையும் கொண்டுள்ளது. இதே பொதுமக்கள் 10.30% பங்குகளையும், பைனான்ஷியல் நிறுவனங்கள் 0.14% பங்குகளையும் வைத்துள்ளனர்.
ஆக இந்த நிறுவனத்தின் டிலிஸ்ட் பற்றிய முடிவுகள், இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் ஆகஸ்ட் 27 அன்று நடக்கவுள்ள நிலையில், அன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்மொழிவுக் கடிதத்தினை சஷி கிரண் ஷெட்டி மற்றும் டேலண்டோஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தனித்தனியாக/ கூட்டாக அல்லது விளம்பரதாரர் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து தங்கள் நோக்கத்தினை வெளிப்படுத்தினர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications