அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு ஒருங்கிணைந்த ஜவுளி நிறுவனமாகும். இந்நிறுவனம் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளது, இதில் மறுவடிவமைப்பு மற்றும் பேக்கிங் நடவடிக்கைகளும் அடங்கும். இந்த நிறுவனம் முகேஷ் அம்பானியால் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் அல்ல. 2019ம் ஆண்டில் அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திவால் செயல்முறைக்கு வந்தபோது ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் அதை கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தின் புரோமோட்டரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வசம் தற்போது நிறுவனத்தின் 40 சதவீத பங்குகள் உள்ளன.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தை மட்டுமே சந்தித்து ரூ.30க்கு மேல் உயர்ந்ததால் செய்திகளில் இந்நிறுவன பெயர் பரவலாக இடம் பெற்றன. 2024 மார்ச் 11ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.32ஐ எட்டியது. ஆனாலும் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த பிப்ரவரி 21 முதல் மார்ச் 3ம் தேதி வரையிலான 6 வர்த்தக தினங்களில் இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது.

குறிப்பாக கடந்த 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.14.50க்கு சென்றது. இருப்பினும் கடந்த 2 வர்த்தக தினங்களாக இந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தொடர்ந்து 2வது வர்த்தக தினமாக இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1.64 சதவீதம் உயர்ந்து ரூ.16.77ஆக இருந்தது. 2019 டிசம்பர் இறுதியில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.3.04ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அலோக் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே கொடுத்து வருகிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.813 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் அந்த ஆண்டில் இந்நிறுவனம் ரூ.5,356.35 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டுகளில் இந்நிறுவனம் முறையே ரூ.261 கோடி மற்றும் ரூ.243 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. அந்த காலாண்டுகளில் இந்நிறுவனம் முறையே ரூ.853 கோடி மற்றும் ரூ.822 கோடி வருவாயை சம்பாதித்துள்ளது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications