ஹைதராபாத்: இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தி நிறுவனமான அமரராஜா எனர்ஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து இரண்டு நாட்களாக வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனம் பியாஜியோ இந்தியா நிறுவனத்துடன் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தமாகும்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி அமரராஜா எனர்ஜி (Amara raja energy)நிறுவனத்திற்கும் பியாஜியோ இந்தியா(Piaggio India) நிறுவனத்திற்கும் இடையே லித்தியம் செல் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்களை சப்ளை செய்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனை அடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று அமரராஜா எனர்ஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 சதவிகிதம் உயர்ந்து 1594 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இதுவே ஆகஸ்ட் 13ஆம் தேதியிலும் ஒரு பங்கு மதிப்பு 1638 ரூபாய் வரை உயர்ந்தது.
அமரராஜா எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான அமரராஜா அட்வான்ஸ் செல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பியாஜியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக மும்பை பங்குச்சந்தையில் ஆவணம் தாக்கல் செய்துள்ளது.
இத்தாலியை தலைமை இடமாகக் கொண்ட பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் பியாஜியோ பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய மின்சார வாகனங்களுக்கு தேவையான லித்தியம் அயன் செல்கள் மற்றும் சார்ஜர்களை தயாரித்து வழங்கும் படி அமரராஜா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த செல்கள் மற்றும் பிற பாகங்கள் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அமரராஜா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த செய்தி வெளியானதை அடுத்து அமரராஜா நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்தது. அமரராஜா எனர்ஜி நிறுவனத்தை பொருத்தவரை எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம், லித்தியம் செல்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்கள் மற்றும் ஆட்டோமேட்டிவ் மற்றும் இண்டஸ்ட்ரியல் லூப்ரிகன்ட் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
எனர்ஜி ஸ்டோரேஜ் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாக அமரராஜா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதலே அமரராஜா மற்றும் பியாஜியோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் இடையே கூட்டாண்மை நிலவி வருகிறது.
அமரராஜா எனர்ஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 156 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால அதிகபட்ச மதிப்பு 1775 ரூபாய் ஆகும் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 599 ரூபாய் ஆகும்.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 29,268 கோடி ரூபாய் . ஜூன் உடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 3,293 கோடி ஆக இருக்கிறது. இது முந்தைய காலாண்டை விட அதிகமாகும். நிறுவனத்தின் லாபமும் 249 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அமரராஜா நிறுவனத்தை பொருத்தவரை புரமோட்டோர்கள் 32 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர். சில்லறை முதலீட்டாளர்கள் 28 சதவீத பங்குகளை கொண்டுள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகபட்சமாக 23 சதவீத பங்குகளை வைத்துள்ளன .
Story written by: Devika
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications