1987-க்கு பின் மிக பெரிய வீழ்ச்சியில் அமெரிக்கா! சமாளிக்கும் இந்தியா! உலக சந்தைகள் நிலவரம்!

உலகம் கொரோனா பயத்தில் உறைந்து கொண்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனையை சமாளிக்க, பல நாடுகள் தங்கள் செயல்பாடுகளைத் போர் கால அடிப்படையில் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை எல்லாம் தாண்டி, பல நாடுகள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் பெரிய பலன்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

உலக சந்தைகள் எல்லாம் பயத்தில் சரிந்து கொண்டு இருக்கிறது. அந்த உலக பங்குச் சந்தைகள் சரிவைப் பற்றித் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

செய்தி

செய்தி

உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும், கொரோனா வைரஸுக்கான மாற்று மருந்தை சோதிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நல்ல செய்தியால், தொடர்ந்து சரிந்து கொண்டு இருந்த பங்குச் சந்தைகள் கூட கொஞ்சம் ஆறுதல் அடைந்ததாகவே தெரிகிறது.

யெஸ் பேங்க்

யெஸ் பேங்க்

அதோடு, இந்திய பங்குச் சந்தைகளை பாதித்துக் கொண்டிருந்த முக்கிய காரணிகளில், கொரொனா வைரஸுக்குப் பின் யெஸ் பேங்க் பிரச்சனைக்கு ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. அந்த யெஸ் பேங்க் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் வரும் மார்ச் 18, மாலை 6 மணி முதல் 50,000 ரூபாய்க்கு மேல் வழக்கம் போல் பணம் எடுக்கலாம் எனச் சொன்னதும் இந்திய சந்தைகளை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி இருக்கிறது. முதலில் இந்திய சந்தைகளில் இருந்தே தொடங்குவோம்.

இந்திய சந்தைகள்

இந்திய சந்தைகள்

இன்று காலை சென்செக்ஸ், சுமாராக 640 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் போகப் போக, முதலீட்டாளர்களின் பாசிட்டிவ் செண்டிமெண்டால், தற்போது சென்செக்ஸ் சுமாராக 500 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதே போல நிஃப்டியும் சுமாராக 177 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆசிய சந்தைகளில் என்ன நிலை..?

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

கடந்த சில வாரங்களாக, கொரோனா வந்த பின், பல நாட்களில் ஆசிய சந்தை முழுவதும் சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தன. ஆனால் இன்று சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சீனா என பல நாட்டு பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நல்ல ஏற்றத்திலேயே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நேற்றைய வர்த்தகத்தின் ஐரோப்பாவில் கதையே வேறு.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

நேற்று மார்ச் 16, 2020, திங்கள் அன்று, இங்கிலாந்து நாட்டின் எஃப் டி எஸ் இ சந்தை சுமாராக 4.01 % சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்ஸின் சி ஏ சி சந்தை 5.75 % சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 5.31 % சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கொரோன வைரஸஸுக்கான மருந்து செய்தியால் இன்று இந்த சந்தைகள் ஏற்றம் காணலாம் எனச் சொல்லி இருந்தார்கள் அனலிஸ்ட்கள். ஆனால் இப்போது வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய நாட்டு சந்தைகள் இறக்கத்தில் தான் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. இதை விட கொடுமையான விஷயம் அமெரிக்க சந்தைகள் தான்.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகின் வல்லரசான அமெரிக்க சந்தைகளே நேற்று, மார்ச் 16, 2020 மரண அடி வாங்கி இருக்கிறது. 1987-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அமெரிக்க சந்தை செம அடி வாங்கி இருக்கிறதாம். டவ் ஜோன்ஸ் ஒரே நாளில் 3000 புள்ளிகள் (12.9 %), எஸ் & பி 500 ஒரே நாளில் 2,386 புள்ளிகள் (12 %), நாஸ்டாக் ஒரே நாளில் 6,904 புள்ளிகள் (12.3 %) என மிகப் பெரிய வரலாற்றுச் சரிவைக் கண்டு இருக்கின்றன.

அமெரிக்க சரிவு காரணங்கள்

அமெரிக்க சரிவு காரணங்கள்

ஏன் இப்படி அமெரிக்க சந்தைகள் படு பயங்கரமாக சரிந்து இருக்கிறது..? என்று கேட்டால் "இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கலாம்" என அதிபர் டொனால் ட்ரம்ப் பேசியது பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி சந்தையை புரட்டி எடுத்து இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+