பங்கு சந்தை முதலீடு என்றாலே இது சூதாட்டம், இது ரிஸ்கானது என்ற காலமெல்லாம் மாறிவிட்டது. பங்கு சந்தையிலும் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை காட்டும் விதமாக பல முதலீட்டாளர்களும் லாபம் கண்டு வருகின்றனர்.
பொதுவாக ஒரு பங்கினை வாங்கும்போது எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும். ஏன் ஒரு பங்கினை வாங்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்காக அவர்கள் கூறக் காரணம் என்ன? இது போன்ற விஷயங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் பிறகு வாங்கி வைக்கலாம். நிபுணர்களே பரிந்துரை செய்திருந்தாலும், அதனை வாங்கும் முன் தெளிவாக தெரிந்து கொண்டு பின் வாங்க வேண்டும்.
பரிந்துரை
எடில் வைஸ் புரோக்கிங் நிறுவனம் டெக் மகேந்திரா லிமிடெட் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இந்த பங்கின் இலக்கு விலையானது 2050 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 39.93% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது 1465 ரூபாய் என்ற லெவலில் உள்ளது.
புதிய ஒப்பந்தங்கள்
இதன் இன்றைய சந்தை மூலதனம் 1,43,933.64 கோடி ரூபாயாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஐடி துறையின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக புதிய ஒப்பந்தங்கள் பலவும் போட்டு வருகின்றது. குறிப்பாக CME செக்மண்டில் பல புதிய டீல்களை வென்றுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் 5ஜி வளர்ச்சி, கிளவுட் சேவை என பலவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
அதிகரிக்கும் பணியமர்த்தல்
2022ம் நிதியாண்டில் டெக் மகேந்திரா நிறுவனம் 10000 பேரை பணியமர்த்தியது. 2023ம் நிதியாண்டில் இன்னும் கூடுதலாக பணியமர்த்த திட்டமிட்டு வருகின்றது. மேலும் அண்டை நாடுகளிலும் தொடர்ந்து பரவலாக விரிவாக்கம் செய்து வருகின்றது. இது மேற்கொண்டு இதன் வருவாயினை உயர்த்த காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய பங்கு விலை
டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று என்.எஸ்.இ-யில் 1.93 சதவீதம் அதிகரித்து, 1454.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 1479.80 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையாக 1449.10 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இந்த பங்கு விலையானது, இன்று பி.எஸ்.இ-யில் 1.87 சதவீதம் அதிகரித்து, 1455.07 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 1483.05 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையாக 14490 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications