நச்சுன்னு 10 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை.. என்னென்ன பங்குகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாம் அலை மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற பல காரணங்களால் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பங்கு சந்தையானது பெரியளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கமும் குறைந்து வரும் நிலையில், பொருளாதாரமும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.

 

இதன் காரணமாக பங்கு சந்தைகள் அனுதினமும் புதிய உச்சம் தொட்டு வருகின்றன.

ஆக இந்த நேரத்தில் பங்கு சந்தை முதலீடு செய்யலாமா? எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்? அப்படி செய்தால் எதில் லாபம் கிடைக்கும். பங்கு சந்தை நிபுணர்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது சரிவினைக் கண்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது இன்னும் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியும் குறைவு?

உற்பத்தியும் குறைவு?

கொரோனா காலத்தில் தேவை குறைந்த நிலையில், விலையினை கட்டுக்குள் கொண்டு வர உற்பத்தியினை எண்ணெய் உற்பத்தி நாடுகள் குறைத்திருந்தன. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், உற்பத்தி மீண்டும் அதிகரிக்கப்படவில்லை. ஆக இது இன்னும் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

இறக்குமதி அதிகம்
 

இறக்குமதி அதிகம்

இந்தியாவினை பொறுத்த வரையில் அதிகளவிலான எண்ணெயினை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. ஆக சர்வதேச சந்தையில் ஏற்படும் எண்ணெய் தாக்கமானது, இந்தியாவில் அதிகம். அதோடு இந்தியாவில் எண்ணெய் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் வருவாயும் அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

கேஸ் விலையும் அதிகரிப்பு

கேஸ் விலையும் அதிகரிப்பு

எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் விலையையும் தற்போது தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக கேஸ் உற்பத்தி நிறுவனங்களின் வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த ஜூன் காலாண்டில் பல நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கையும் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், இது இனி வரும் காலாண்டுகளிலும் சாதகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு பரிந்துரை

பங்கு பரிந்துரை

இதற்கிடையில் தான் ஷேர்கான் நிறுவனம் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) - CMP - Rs.2,389 - Buy - Rs.2,400

பெட்ரோநெட் எல் என் ஜி அன்ட் ஆயில் இந்தியா (Petronet LNG and oil india) - CMP - Rs.230 - Buy - Rs.285

மகாநகர் கேஸ் (Mahanagar Gas) - CMP - Rs.1,171 - Buy - Rs.1,450

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) - CMP - Rs.112.95 - Buy - Rs.125

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) - CMP - Rs.491.05 - Buy - Rs.520

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) - CMP - Rs.276.10 - Buy - Rs.340

கெயில் (GAIL India) - CMP - Rs.147.40 - Buy - Rs.196

ஜிஎஸ்பிஎல் (GSPL) - CMP - Rs.349 - Buy - Rs.410

குஜராத் கேஸ் (Gujarat Gas) - CMP - Rs.700 - Buy - Rs.890

இந்திர பிரசாத கேஸ் (Indraprasatha GAS) - CMP - Rs.558 - Buy - Rs.650

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Analysts suggest 10 oil and Gas stocks to buy

Investment updates.. Analysts suggest 10 oil and Gas stocks to buy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X