60% உயர்ந்த அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் விலை.. இதற்கு பின்னால் உள்ள காரணம் தெரியுமா..?

செப்டம்பர் மாதம் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கான மாதமாக உள்ளது. ஒரு காலத்தில் மேல் நோக்கி உயர்ந்த பிரபலமான நேரத்தில், மிகப்பெரிய சிக்கலில் சிக்கி ஒரே அடியாக சரிந்த திவால் நிலைக்கு சென்றவர்தான் அனில் அம்பானி. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் அனில் அம்பானி குழுமத்தின் பங்குகள் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.

அதுவும் குறிப்பாக, அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த (ADAG), ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய இரண்டு நிறுவனங்கள் கடந்த ஒரு மாதத்தில் வியப்பூட்டும் வகையில் ஏற்றம் கண்டுள்ளன. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகியவை தலா 60% வரை அதிகரித்துள்ளன.

 60% உயர்ந்த அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் விலை.. இதற்கு பின்னால் உள்ள காரணம் தெரியுமா..?


ரிலையன்ஸ் பவர் பங்குகள் கடந்த மாதத்தை விட 69.79% லாபத்துடன் உள்ளன. எனவே, கடந்த சில நாட்களில், முதலீட்டாளர்கள் 23.26% லாபம் கண்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 25 அன்று ரூ. 41.45 ஆக இருந்த பங்கு இன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து, ஒரு பங்கு ரூ.51.09-ஐ எட்டியது. இதன் காரணமாக, பெரிய எதிர்கால வருவாய்க்கான முதலீட்டாளர் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதேபோல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்கு விலையும் உயர்ந்து, தற்போது 1.5% அதிகமாக வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போர்டு கூட்டத்திற்கு முன்பு நேற்றைய வர்த்தகத்திலும் நிறுவனத்தின் பங்குகள் ஜம்ப் கொடுத்தன.

இதற்கிடையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், முன்னணி நிறுவனமான வர்டே இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ், எல்பியின் துணை நிறுவனமான VFSI ஹோல்டிங்ஸ் Pte லிமிடெட் நிறுவனத்திற்கு 350 மில்லியன் டாலர் அதாவது ரூ.2930 வரை நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இது உலகளாவிலான மாற்று முதலீட்டு நிறுவனம் ஆகும்.

பணியாளர்கள் பங்கு விருப்பத் திட்டமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பணியாளர்கள் பங்கு விருப்பத் திட்டம் ரூ. 850 கோடி மதிப்புள்ள ரூ.2.60 கோடி ஈக்விட்டி பங்குகளை மானியமாக வழங்கும் என்று கூறியுள்ளது. இது முழுமையாக நீர்த்த மூலதனத்தின் 5% ஆகும். இது வணிகத்தின் செயல்திறன் மற்றும் விரிவாக்கத்திற்கு ஏற்ப பணியாளர் சம்பாதிக்கும் திறனை பணியாளர்கள் பங்கு விருப்பத் திட்டம் செயல்படுத்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூடி, VFSI ஹோல்டிங்க்ஸ் பிடிஇ நிறுவனத்தின் பாதுகாப்பற்ற வெளிநாட்டு நாணய மாற்றத்தக்க பத்திரங்களை (FCCBs) வழங்குவதன் மூலம் ரூ. 2,930 கோடி நிதியளிப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்போவதாகவும், இந்த FCCB கள் 10 வருட முதிர்வு காலத்தைக் கொண்டிருக்கும் என்றும், ஆண்டுதோறும் 5% மிகக் குறைந்த விலை கூப்பன் மற்றும் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்று நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கிடையில், ரிலையன்ஸ் பவர் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 4.99% உயர்ந்து ரூ.51.09 ஆகவும், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்கு 1.53% சரிவில் ரூ.331.00 ஆக முடிந்தது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+