ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அனில் அம்பானிக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் பங்கு 99 சதவீதம் சரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டு வந்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் மகன் அனில் அம்பானி. முகேஷ் அம்பானியின் சகோதரர். ஒரு காலத்தில் இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டமடைந்து திவாலாகிவிட்டார்.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனமும் கடுமையாக வீழ்ந்தது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2500 ரூபாய். அதுவே 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 25 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது. இதனால் இதில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த பங்கு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 18 சதவீதம் உயர்ந்துள்ளதாக கரகு நிறுவனங்கள் கூறுகின்றன. குறிப்பாக இதன் ஒரு பங்கு மதிப்பானது 200 ரூபாயை தாண்டி 214 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. ஆனந்த் ரதி தரகு நிறுவனத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளரான ஜிகார் எஸ் பட்டேல் குறிப்பிட்ட சரிவிலிருந்து ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டிரெக்சர் நிறுவனம் மீண்டு விட்டதாக கூறுகிறார். இந்த பங்கின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 8,200 கோடியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்திருந்த முதலீட்டாளர்கள் பலருக்கும் இது ஒரு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 214 என்ற அளவில் வர்த்தகமானது.
இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 144 ரூபாய் 52 வார கால அதிகபட்ச மதிப்பு 308 ரூபாய் ஆகும். இந்த நிறுவன பங்கின் பேஸ் வேல்யூ 10 புக் வேல்யூ 220.82. நிறுவன வருவாயை பொருத்தவரை 2024 ஆம் நிதி ஆண்டில் இதன் வருமானம் 22,519 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டை விட சற்றே அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 646 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறது இந்த நிறுவன பங்குகளில் 68% சில்லறை முதலீட்டாளர்களே வைத்திருக்கிறார்கள். 16 சதவீதம் புரமோட்டர்களும் வெளிநாட்டு நிறுவனங்கள் 12 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications